×

சனி மகிழ ஒரு ஸ்லோகம்

இஷ்வாகு வம்ச வழிவந்த தசரதர், அயோத்தியாபுரியை ஆட்சிபுரிந்த காலத்தில் சனி பகவான், தன் பெயர்ச்சிக் காலத்தில் ரோகிணி நட்சத்திரத்தைப் பிளந்து கொண்டு செல்ல வேண்டிய அமைப்பு ஏற்பட்டது. ஆனால், அவ்வாறு சனிபகவான் சென்றால் பன்னிரெண்டு ஆண்டுகள் நாட்டில் கடும்பஞ்சம் ஏற்படும் என்று ஜோதிடத்தை அடிப்படையாக வைத்து, மகரிஷிகள் தசரதனிடம் கூறினர். தன் ஆட்சிக் காலத்தில் அம்மாதிரி பஞ்சம் வருவதையும், அதனால் மக்கள் வருந்துவதையும் சிறிதும் விரும்பாத தசரதச் சக்கரவர்த்தி, தன் ரதத்தில் ஏறி நேரே சனிபகவான் இருப்பிடத்திற்கே சென்றார்.

சனி பாதிப்பு என்பது கட்டாயமானாலும், அது பெரிய அளவில் தன் நாட்டையும், மக்களையும் தாக்கி விடக் கூடாது என்று கண்களில் நீர் பெருக, மனம் உருகி வேண்டிக் கொண்டார். அந்த வேண்டுதலை ஒரு ஸ்லோகம் மூலமாக அவர் தெரிவித்தார். அந்த உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட சனி பகவான், தன் பாதிப்பின் வீரியத்தைத் தான் வெகுவாகக் குறைத்துக் கொள்வதாக தசரதனிடம் வாக்கு கொடுத்தார். அதோடு, அந்த ஸ்லோகத்தால் தன்னை வழிபடும் அனைவருக்குமே தான் பெருந்துன்பம் விளைவிக்க மாட்டேன் என்றும் உறுதியளித்தார்.

அந்த அபூர்வமான ஸ்லோகம் இதுதான்:

நம: கிருஷ்ணாய நீலாய ஸிதிகண்ட நிபாய ச
நம: நீலமயூகாய நீலோத்பல நிபாயச
நமோ நிர்மாம்ஸதேஹாய தீர்க்கஸ்ருதி ஜடாய ச
நமோ விசால நேத்ராய ஸுஷ்கோதர பயானக
நம: பௌருஷகாத்ராய ஸ்தூலரோம்ணே ச தே நம:
நமோ நித்யம் க்ஷுதார்த்தாய ஹ்யத்ருப்தாய ச தே நம:
நமோ கோராய ரௌத்ராய பீஷணாய கரானிதே
நமோ தீர்க்காய ஸுஷ்காய கால தம்ஷ்ட்ர நமோஸ்துதே
நமஸ்தே கோர ரூபாய துர்நிரீக்ஷ்யாய தே நம:
நமஸ்தே ஸர்வபக்ஷாய வலீமுக நமோஸ்துதே
ஸூர்யபுத்ர நமஸ்தேஸ்து பாஸ்கரே பயதாயினே
அதோத்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே
நமோ மந்தகதே துப்யம் நிஷ்ப்ரபாய நமோ நம:
தபனாஜ்ஜாத தேஹாய நித்ய யோகதராய ச
க்ஞாநசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்யபாத்மஜஸூனவே
துஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் க்ருத்தோ ஹரஸி தத்க்ஷணாத்
தேவாஸுர மநுஷ்யாஸ்ச ஸித்த வித்யாதரோரகா:
த்வயா விலோகிதஸ்தேபி நாஸம் யாந்தி ஸமூலத:
ப்ரஸாதம் குருமே ஸௌரே ப்ரணத்யா ஹி த்வமர்த்தித:
ஏவம் ஸ்துதஸ்ததா ஸௌரிர் க்ரஹராஜோ மஹாபல:
அப்ரவீச்ச சனிர் வாக்யம் ஹ்ருஷ்டரோமா து பாஸ்கரி:
ப்ரீதோஸ்மி தவ ராஜேந்த்ர ஸ்தோத்ரேணானேன ஸ்ம்ப்ரதி
அதேயம் வா வரம் துப்யம் ப்ரீதோஹம் பிரதாமி ச


பொதுப் பொருள்:

மயில்கழுத்து போன்ற நீல நிறமுள்ள சனிபகவானே, தங்களுக்கு வணக்கம். கறுமை நிறம் கொண்டாலும், ஈர்க்கும் சக்தியுள்ளவரே தங்களுக்கு வணக்கம். நீலோத்பல மலர் போன்ற நிறமுள்ளவரே! தங்களுக்கு வணக்கம். மெலிந்த உடல், நீண்ட காதும் நீள் முடியும் கொண்டவரே தங்களுக்கு வணக்கம். குறுகிய வயிறுள்ளவரும், சற்றே அச்சுறுத்தும் தோற்றமும் நீண்ட கண்களையும் உடைய தங்களுக்கு வணக்கம். கோபமாகவும், பயத்தை உண்டாக்குபவருமாக உள்ள தங்களுக்கு வணக்கம். சூரிய பகவானின் புத்திரரும், அபயம் அளிப்பவரும், கீழ்ப் பார்வை கொண்டுள்ள தங்களுக்கு வணக்கம்.

பிரளயத்தை உண்டாக்குபவரும், நிதானமாகச் செல்கிறவரும், ஞானக்கண் கொண்டவருமான தங்களுக்கு வணக்கம். தாங்கள் மகிழ்ந்தால் அரச பதவியைக் கொடுப்பீர்கள். கோபம் கொண்டால் அந்த நிமிடமே அதை பறிப்பீர்கள். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், சித்தர்கள், கல்விமான்கள், யாவரும் தங்கள் பார்வை பட்டால் துன்பத்தை அடைகிறார்கள். சூரிய பகவானின் புத்திரனே! வணங்கி உங்களை யாசிக்கிறேன். எனக்கு அருள் புரிய வேண்டும்.

தங்களால் ஏற்படும் பாதிப்புகள் எங்களைப் பெரிதும் பாதிக்காது பாதுகாக்கவேண்டும்.  தசரதரின் இந்த துதியால் மகிழ்ந்த சனிபகவான், அவர் வேண்டிய வரங்களை வாரி வழங்கினார். மேலும், இந்த துதியை சனிக் கிழமைகளில் படித்து சனி பகவானை பூஜித்தால் அவர்களுக்கு ஒருபோதும் துன்பம் நேராது என சனி பகவான் தசரதருக்கு உறுதி அளித்திருக்கிறார்.

Tags : Saturn ,
× RELATED சனி பிரதோஷ வழிபாடு