×

டிஆர்டிஓ புதிய தலைவர் காமத்: ஒன்றிய அரசு நியமனம்

புதுடெல்லி: ஒன்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவராக சதீஷ் ரெட்டி பதவி வகித்து வருகிறார். இவர் தற்போது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதையடுத்து, டிஆர்டிஓ.வின் கீழ் செயல்படும் கடற்படை அமைப்பு மற்றும் சாதனங்கள் பிரிவின் பொது இயக்குநராக பணி புரிந்து வரும் சமீர் வி காமத், டிஆர்டிஓ.வின் புதிய செயலாளர் மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கான உத்தரவை ஒன்றிய பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு டிஆர்டிஓ.வின் தலைவராக 2 ஆண்டுகளுக்கு சதீஷ் ரெட்டி நியமிக்கப்பட்டார். பின்னர், 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருடைய பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது….

The post டிஆர்டிஓ புதிய தலைவர் காமத்: ஒன்றிய அரசு நியமனம் appeared first on Dinakaran.

Tags : DRTO ,Kamath ,Government of the Union ,New Delhi ,Satish Reddy ,Union Security Research and Development Organisation ,TRTO ,Union Government ,
× RELATED ₹25 ஆயிரத்தை அபேஸ் செய்த 2 பேர் கைது