×

குரங்கம்மை பரவல் 21 சதவீதம் சரிந்தது

ஜெனீவா: கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து தற்போது வரை குரங்கம்மை நோய் 98 நாடுகளில் பரவி, 45 ஆயிரம் பேருக்கு மேல் பாதித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 5,907 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஈரான், இந்தோனேசியாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு சமீபத்தில்தான் ஏற்பட்டன. இந்நிலையில், கடந்த வாரம் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையத் தொடங்கி இருப்பதை அறிக்கைகள் மூலம் நிபுணர்கள் கண்டுபிடித்தனர். இங்கிலாந்து சுகாதார துறை அதிகாரிகள் கூறும்போது, ‘குரங்கம்மை பாதிப்பு சர்வதேச அளவில் 21 சதவீதம் குறைந்திருக்கிறது,’ என கூறினர்….

The post குரங்கம்மை பரவல் 21 சதவீதம் சரிந்தது appeared first on Dinakaran.

Tags : Geneva ,Monkeypox ,Dinakaran ,
× RELATED 2024ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார...