×

புதிய பதவி உயர்வு; கொள்கையை கைவிடக்கோரி அணுசக்தி ஊழியர்கள் உண்ணாவிரதம்

திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டம், அணு சக்தி துறையின் டிராம்பே கவுன்சில் மற்றும் டிராம்பே சைன்டிபிக் கவுன்சிலின் புதிய பதவி உயர்வு கொள்கையை கைவிட வேண்டி, தொழிற்சங்க இணைப்பு குழு சார்பில்  கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் ரவுண்டானா அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு  தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்கத்தின் நிறுவன உறுப்பினர் சக்கரபாணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்கத்தின் தலைவர்  சின்ன கோவிந்தன், அணு ஆற்றல் ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜான், பொது செயலாளர் மனோகரன், பாபா அணு ஆராய்ச்சி மைய ஊழியர் சங்க தலைவர் தானுமலையான், பொது செயலாளர் பாபி சர்க்கார், தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் கருணாமூர்த்தி, மத்திய பொது பணி துறை ஊழியர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன், பொது செயலாளர் முருகராஜ், பாவினி ஊழியர் சங்கத்தின் தலைவர்  பிரபாகரன் மற்றும் பொது செயலாளர் தீன தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அனைத்து சங்கங்களின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு தங்களின், எதிர்ப்பை பதிவு செய்தனர். இறுதியில், தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்கத்தின்  தலைவர் குருசாமி நன்றியுரையாற்றினார்….

The post புதிய பதவி உயர்வு; கொள்கையை கைவிடக்கோரி அணுசக்தி ஊழியர்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Thirukkalukunram ,Chengalpattu District ,Trompe Council of Atomic Energy Department ,Trompe Scientific Council ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!