×

சனீஸ்வரர் தலங்கள்

* சென்னை - ஆதம்பாக்கம் ஈ.பி.காலனியில் உள்ளது நாகமுத்து மாரியம்மன் ஆலயம். இங்கு சனிபகவான் விஸ்வரூப ஸர்வ மங்கள சனி என்ற திருநாமத்துடன் மங்களங்களை வாரி வழங்குகிறார்.

* திருக்கோடிக்காவல் எனும் தலத்தில் பாலசனி பகவான் அருள்கிறார். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சூரியனார் கோயிலிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம். இத்தலத்தில் சனிபகவான் குழந்தை வடிவில் தரிசனமளிக்கிறார்.

* தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ளது குச்சனூர். இங்கு சனிபகவான் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். கல் தூணாக பூமியில் இருந்து தோன்றிய இவருக்கு மஞ்சள் காப்பு சாத்துகிறார்கள். சூர்யநாராயணின் மகன் என்பதால் நாமமும், ஈஸ்வர பட்டம் பெற்றிருப்பதால் விபூதியும் அணிவிக்கிறார்கள்.

* திருவண்ணாமலை மாவட்டம் போரூர் வட்டத்தில், ஆரணி - படவேடு சாலையில் சந்தவாசலுக்கு 3 கி.மீ கிழக்கே அமைந்துள்ளது ஏரிக்குப்பம். இங்கு யந்திர சனி என்கிற திருப்பெயரில் அருள்கிறார்.

* சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் உள்ளது அகஸ்தீஸ்வரர் ஆலயம். இத்தலத்தில் சனிபகவான் மிகவும் வரப்பிரசாதியாய் திகழ்கிறார். சனீஸ்வர பகவானே இத்தல இறைவனை பூஜித்து இங்குள்ள நள்ளார் தீர்த்தத்தில் நீராடி தன் தோஷம் நீங்கப் பெற்றதாக ஐதீகம்.

* திருவள்ளூர் - திருத்தணி வழித்தடத்தில் திருவள்ளூரிலிந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது அருங்குளம். இங்கு அருளும் அகத்தீசர், சனிபகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டவர். இவரை தரிசித்தால் சனிபாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

* திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது. இதில் நவகைலாயங்களில் ஒன்றான கைலாசநாதர் ஆலயம் உள்ளது. சனிபகவானின் அம்சமாக ஈசன் அருளும் இத்தலத்திற்கு வந்து வழிபட, இழந்த சொத்துக்கள் திரும்பக் கிடைப்பதாக பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.
 
* விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது கல்பட்டு. இத்தலத்தில் பெரிய திருவுருவாக 21 அடி உயரத்தில், தன் வலது காலை தன் வாகனமான காகத்தின் மீது வைத்த நிலையில் கம்பீரமாக சனிபகவான் எழுந்தருளியிருக்கிறார்.

Tags : Saneeswarar ,
× RELATED பவானி தொகுதியில் 136 நிர்வாகிகள்...