×

‘அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் இந்தியர்களே இருக்கிறீர்கள்’: 4 இந்திய வம்சாவளிப் பெண்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்திய மெக்சிகோ பெண் கைது..!!

டெக்ஸாஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 4 இந்திய வம்சாவளி பெண்கள் மீது மெக்சிகோ அமெரிக்க பெண் ஒருவர் இனவெறி தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்ஸாஸ் மாகாணத்தின் டலாஸ் நகரில் உள்ள ஒரு உணவு விடுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹோட்டல் ஒன்றுக்கு உணவருந்த சென்ற இந்திய வம்சாவளி பெண்களை பார்த்த, மெக்சிகோ வம்சாவளி பெண் ஒருவர், மிகவும் மோசமான வார்த்தைகளால் வசைபாடினார். அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் இந்தியர்களே உள்ளீர்கள் என்று சீரிய அந்த பெண், இந்திய வாழ்க்கை சிறப்பானது என்றால் இந்தியாவுக்கே செல்லுங்கள் என்று கத்தினார். ஒரு கட்டத்தில் 4 இந்திய பெண்களையும் அந்த பெண் கைகளால் தாக்க தொடங்கினார். நேற்று முன்தினம் நடந்த இந்த சம்பவத்தை இனவெறி தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ அமெரிக்கா முழுவதும் வேகமாக பரவியது. அதனை தொடர்ந்து அந்த பெண்ணை டலாஸ் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் அமெரிக்காவில் பிறந்த மெக்சிகோ வம்சாவளியான எஸ்மிரல்டா என்பவர் ஆவார். அவரிடம் துப்பாக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இனவெறியுடன் தாக்குதல் நடத்துதல், அச்சுறுத்தும் வகையில் திட்டுதல் போன்ற கடுமையான பிரிவுகளில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் பிணையில் வர 8 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இந்தியர்கள் தங்கள் கல்வியால், முறைப்படியான விசா நடைமுறைகளை பின்பற்றி அமெரிக்காவில் குடியேறி வருகின்றனர். ஆனால் மெக்சிகோ நாட்டின் பெரும்பாலானவர்கள், கள்ளத்தனமாக எல்லைகளை கடந்து அமெரிக்காவில் குடியேறுவோர் ஆவர். அந்த நாட்டை சேர்ந்த ஒரு பெண் இனவெறி தாக்குதல் நடத்தியிருப்பது அமெரிக்க வாழ் இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. …

The post ‘அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் இந்தியர்களே இருக்கிறீர்கள்’: 4 இந்திய வம்சாவளிப் பெண்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்திய மெக்சிகோ பெண் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Texas ,Mexico ,Texas province, USA ,Indians ,Dinakaran ,
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...