×

ரூ.930 கோடி மோசடி வழக்கில் பாசி நிதிநிறுவன உரிமையாளர்கள் மோகன்ராஜ், கமலவள்ளிக்கு 27 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

சென்னை; ரூ.930 கோடி மோசடி வழக்கில் பாசி நிதிநிறுவன உரிமையாளர்கள் மோகன்ராஜ், கமலவள்ளிக்கு 27 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2011ல் தமிழகம் முழுவதும் 52,000 முதலீட்டாளர்களிடம் ரூ.930 கோடி வசூலித்து மோசடி செய்த வழக்கில் மோகன்ராஜ், கமலவள்ளி, கதிரவனை சிபிஐ கைது செய்தது. கதிரவன் உயிரிழந்துவிட்ட நிலையில் மற்ற இருவருக்கும் நீதிமன்றம் 27 ஆண்டு சிறை தண்டனை விதித்து தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருவருக்கும் 27 ஆண்டுகள் சிறை, ரூ.171.74 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. …

The post ரூ.930 கோடி மோசடி வழக்கில் பாசி நிதிநிறுவன உரிமையாளர்கள் மோகன்ராஜ், கமலவள்ளிக்கு 27 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Mohanraj ,Kamalavalli ,Basi Financial Institutions ,Chennai ,Basi financial institution ,Dinakaran ,
× RELATED ஏரியில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி சாவு