
சென்னை: கடந்த 2002ல் கஸ்தூரிராஜா இயக்கிய ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தில் தனுஷ், செரீன் ஆகியோருடன் அறிகமுமானவர், அபிநய் கிங்கர் (43). தொடர்ந்து ‘ஜங்ஷன்’, ‘சிங்கார சென்னை’, ‘பொன் மேகலை’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். ‘சக்சஸ்’, ‘தாஸ்’, ‘தொடக்கம்’, ‘சொல்ல சொல்ல இனிக்கும்’, ‘பாலைவனச் சோலை’, ‘ஆறுமுகம்’, ‘கார்த்திக் அனிதா’, ‘கதை’, ‘ஆரோகணம்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
இந்நிலையில், திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அபிநய் கிங்கர், ஆளே உருமாறி எலும்பும் தோலுமாக, வயிறு வீங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அபிநய் கிங்கர் திருமணம் செய்துகொள்ளவில்லை. வறுமையில் வாடும் அவர், தனது சிகிச்சைக்கு 28.5 லட்ச ரூபாய் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.
