×

பள்ளியில் இறந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் முதல்வரை சந்திக்க திட்டம்: மகளின் சாவுக்கு நீதி கேட்டு மனு அளிக்கிறார்

சென்னை: உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் சனிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது, மகளின் சாவுக்கு நீதி கேட்டு மனு அளிக்க உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஸ்ரீமதியின் தாயார் செல்வி, என்னுடைய மகளின் தோழிகள் 2 பேரை போலீசார் விசாரித்ததாகவும், வாக்குமூலம் அளித்ததாகவும் செய்திகள் வருகிறது. உண்மையில் அவர்கள் எனது மகளின் தோழிகள் தானா. அவர்கள் பெயர் என்ன என்று எங்களுக்கு தெரியாது. அவர்களை பற்றி எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். சிபிசிஐடி போலீசார் உண்மையை நிலைநாட்டுவார்கள் என்று நாங்களும் நம்புகிறோம். விசாரணை விரைவில் முடிக்க வேண்டும். எனது மகளுக்கு நீதி கேட்டு முதல்வரிடம் மனு கொடுக்க வேண்டும் என பல வகையிலும் முயன்றோம். வரும் வெள்ளிக்கிழமை என்னுடைய மகளுக்கு நீதி கேட்டு சொந்த ஊரான பெரிய நெசலூரில் இருந்து நடைபயணமாக சென்று தமிழக முதல்வரிடம் மனு கொடுக்கலாம் என இருக்கிறோம் என்றார். அதன்படி மாணவி ஸ்ரீமதி தாயார் வருகிற சனிக்கிழமை (நாளை மறுதினம்) சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்திப்பார் என்று கூறப்படுகிறது….

The post பள்ளியில் இறந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் முதல்வரை சந்திக்க திட்டம்: மகளின் சாவுக்கு நீதி கேட்டு மனு அளிக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Sriemathi ,Chennai ,Srimati ,CM. G.K. ,Stalin ,
× RELATED சிசிடிவியில் பதிவான காட்சிகள் ஏன்...