×

புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு முதல்வர் ரங்கசாமி மீது பாஜ எம்எல்ஏ சரமாரி புகார்

புதுச்சேரி: பாஜ ஆதரவு சுயேட்சைகள் மற்றும் பாஜ எம்எல்ஏக்களின் தொகுதிகளை முதல்வர் ரங்கசாமி பழிவாங்குகிறார் என புதுச்சேரி சட்டசபையில் கல்யாணசுந்தரம் எம்எல்ஏ சரமாரி புகார் கூறியுள்ளார். புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது சுயேட்சை எம்எல்ஏ அங்காளன்,‘‘எனது தொகுதியில் என்னை கேட்காமல் 2, 3 கமிட்டிகள் போடப்பட்டுள்ளது. இது எந்த விதத்தில் நியாயம். என்னை புறக்கணிப்பதற்கு காரணம் என்ன? பாஜவை நான் ஆதரிப்பதற்காக என்னை கேட்காமல் போடுகிறார்களா? அல்லது தனித்தொகுதி என்பதால் யார் கேட்க போகிறார்கள் என்ற எண்ணமா?கொலப்பள்ளி அசோக் (சுயேட்சை): பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்களில் பாரபட்சம் பார்க்கிறார்கள். கல்யாணசுந்தரம் (பாஜக): பாஜ எம்எல்ஏ ஆனதாலும், பாஜவுக்கு ஆதரவு கொடுக்கும் சுயேட்சை எம்எஎல்ஏக்களையும் பழிவாங்குகிறார். அரசுக்கு ஆதரவு அளித்து, ரங்கசாமியை நாங்கள் முதல்வராக அமர வைத்துள்ளோம். இந்த ஆட்சியில் இருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் எதிர்க்கட்சியாக கூட அமர்ந்து விடுகிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது….

The post புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு முதல்வர் ரங்கசாமி மீது பாஜ எம்எல்ஏ சரமாரி புகார் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,BJP MLA ,Chief Minister ,Rangasamy ,Kalyanasundaram ,BJP MLAs ,
× RELATED புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!!