×

கீழ்கோத்தகிரி வனப்பகுதியில் கூடுகட்டி வாழும் இருவாட்சி பறவைகள்: பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

கோத்தகிரி:  மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை சூழலில் பறவைகள் வாழ்ந்து வருகின்றன. மனிதர்கள் நடமாட்டம் இல்லாத, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மட்டுமே வாழக்கூடிய ஹான்பில் என கூறப்படும் இருவாட்சி பறவைகள் வாழ்ந்து வந்தாலும், இந்த பறவைகள் எண்ணிக்கை கடந்த காலங்களில் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கீழ் கோத்தகிரி, கரிக்கையூர் வனப்பகுதியில் அமைந்துள்ள இயற்கை காடுகளில் தற்போது இருவாட்சி பறவைகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கீழ் கோத்தகிரி வனப்பகுதியில் 15 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இருவாட்சி பறவைகள் அப்பகுதியில் கூண்டுகள் அமைத்துள்ளது. இது இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பார்ப்பதற்கு ஹெலிகாப்டர் போன்ற காட்சி அளிக்கும் இருவாட்சி பறவைகள் தற்போது கீழ் கோத்தகிரி வனப்பகுதியில் தென்படுவதால் பார்வையாளர்கள் புகைப்படம் எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்….

The post கீழ்கோத்தகிரி வனப்பகுதியில் கூடுகட்டி வாழும் இருவாட்சி பறவைகள்: பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kilikottagiri forest ,Kotagiri ,Nilgiris district ,Kilikotagiri forest ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்