×

வளர்ச்சி பணிகளில் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம் மும்முரம்: பொதுமக்கள் பாராட்டு

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டத்தில் அரசு வளர்ச்சி பணிகளில் வெற்றி நடைபோடும் கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் திமுக ஆட்சியில் மக்கள் நலப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்படாத பணிகள் தற்போது திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் மிகவும் பழுதடைந்து சிமெண்ட் காரைகள் கீழே விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பழமையான கட்டிடங்களை நீக்கி புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என கடந்த அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்கள் கண்டு கொள்ளாத நிலையில் திமுக ஆட்சியில் ஊராட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் கொரடாச்சேரி ஒன்றியத்தில் பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பதிலாக அருகிலேயே புதிய அலுவலகம் எஸ்.சி.பி.ஏ.ஆர் திட்டத்தில் 7,663.6 சதுர மீட்டரில் அடித்தளமும், அதேபோன்று மேல் தளமும் கட்டும் கட்டுமான பணி ரூ.3 கோடியே 23 லட்சத்து, 10 ஆயிரம் மதிப்பில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த அலுவலகத்தில் 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறை, பொறியாளர் அறை, ஒன்றியகுழு தலைவர் அறை, ஒன்றியகுழு கூட்டஅறை, அலுவலர்கள் கூட்ட அறை, கணினி அறை, ஆடிட்டர் அறை, ஸ்டோர் ரூம், ஆண், பெண் என தனி தனி கழிவறை வசதி என நவீன முறையில் கட்டுமான பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் பெருந்தரைக்குடி ஊராட்சியில் குளிக்கரையில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.இதேபோல் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கரையாபாலையூர் ஊராட்சி கட்டளை கிராமத்தில் அங்கன்வாடி கட்டும் பணியும், இலையூர் ஊராட்சி அடவங்குடி கிராமத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மேற்கண்ட மூன்று அங்கன்வாடி கட்டிடங்களும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி தலா ரூ.15 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. மேலும்ட கொரடாச்சேரி அருகில் உள்ள ஆய்குடியில் பெரியார் சமத்துவபுரத்தில் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்த 73 வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி வீட்டிற்கு சமத்துவபுரம் நிதியில் தலா ரூ.4.62 லட்சத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. சமத்துவபுரத்தில் உள்ள 13 பழுதடைந்த வீடுகளுக்கு தலா ரூ.50 ஆயிரத்தில் பராமரிப்பு மணி நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி கொரடாச்சேரி ஒன்றியத்தில் பெரும்பாலான சாலைகள் போடப்பட்டு வருகிறது. குடிநீர் மேல் தேக்க தொட்டிகள் 44 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைகள் மேலும் பல அரசு அலுவலகங்களின் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. ஒன்றியக்குழு தலைவர், துணை தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகின்றனர். கொரடாச்சேரி ஒன்றியத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி மாநிலத்தில் சிறந்த ஒன்றியமாக கொண்டுவர அனைவரும் உழைத்து வருகின்றனர். குடிநீர் மேல் தேக்க தொட்டிகள் 44 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைகள் மேலும் பல அரசு அலுவலகங்களின் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. …

The post வளர்ச்சி பணிகளில் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம் மும்முரம்: பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Koradacherry Panchayat Union ,Needamangalam ,Koradacherry Union ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED கோடை கால பஞ்சத்தை போக்க குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்