மன பயம், மனக்குழப்பம், மன சஞ்சலம் தீர வினை தீர்க்கும் விநாயகரை வழிபடுங்கள்..!!

எல்லா வகை பிரச்சினைக்கும் தீர்வு தரக்கூடிய கடவுள் என்றால் அது அந்த விநாயகப் பெருமான். விக்னங்களை தீர்ப்பதில் முதலிடம் இவருக்கு உண்டு என்று சொல்லுவார்கள் அல்லவா? தேவையற்ற மன பயம், மனக்குழப்பம், மன சஞ்சலம், கணவன் மனைவி பிரச்சனை, வீட்டில் நிம்மதியற்ற சூழ்நிலை, சொத்துக்கள் வாங்குவது விற்பது எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி, அதற்கு விநாயகர் வழிபாட்டை எந்த முறையில் எந்த மந்திரத்தை உச்சரித்து, எப்படி வழிபாடு செய்தால் பிரச்சனைக்கான தீர்வு உடனடியாக கிடைக்கும் என்பது தொடர்பாக இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

விநாயகருக்கு உரியது அருகம்புல், என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். குறிப்பாக இந்த அருகம்புல்லை கால் படாத இடங்களில் இருந்து, நம் கையாலேயே பறித்து, மஞ்சள் நீரில் கழுவி விட்டு, தண்ணீரை நன்றாக உதறி, மஞ்சள் நிற நூலை கொண்டு மாலையாகத் தொடுத்து, நம் வீட்டில் இருக்கும் விநாயக பெருமானுக்கு அணிவிக்க வேண்டும். உங்கள் வீட்டில் மஞ்சள் திரி இருந்தால், அந்தத் திரியை கொண்டு தீபம் ஏற்றலாம்.

மஞ்சள் திரி இல்லாதவர்கள், மஞ்சள் காட்டன் துணியை மஞ்சள் கரைசலில் நனைத்து, நிழலிலேயே உலர்த்தி, அந்த காட்டன் துணியில் தீபம் ஏற்றலாம். அகல் தீபத்தில் நெய் ஊற்றி, மஞ்சள் தீபமேற்றி வைத்து விட்டு, உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டம் தீர வேண்டும் என்று விநாயகப் பெருமானை மனதார வேண்டிக் கொண்டு, இந்த மந்திரத்தை உங்களால் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை உச்சரிக்க வேண்டும். 3 முறை உச்சரித்தால் கூட, நம்பிக்கையோடு வழிபாடு செய்தால் நிச்சயம் கைமேல் பலன் உண்டு என்பதில் சந்தேகமே கிடையாது.

வினை தீர்க்கும் விநாயகரின் மந்திரம்

ஓம் அகமர்ஷன மகரிஷி குரு குரு

ஐம் க்லீம் கம் கணபதியே பாச

அனுகிரக பிரகாச சித்தி தா நமோ நம!

குறிப்பாக மனசு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் மன நிம்மதி இல்லாதவர்கள் விநாயகப் பெருமானை இந்த முறைப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான பிரகாசமான தீர்வு கிடைக்கும் என்பது மட்டும் உறுதி. இந்த பரிகாரத்தை, இந்த வேண்டுதலை எந்த நாளில் செய்தால் நமக்கான பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.

Related Stories:

>