×

பேரம்பாக்கத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி மகளிர் குழுக்களுக்கு 6 கடைகள் ஒதுக்கீடு; கிராம சபையில் தீர்மானம்

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சுயம்பிரகாஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் அமுதா, வார்டு உறுப்பினர்கள் பாத்திமா, சந்திராய, மோகனா, எழிலரசன், விஜயலட்சுமி, சுதாகர், லட்சுமி, கலா, ஊராட்சி செயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரம்பாக்கம் ஊராட்சியில் 25 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்படுகின்றன. அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 6 வணிக கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அந்த கடைகளை 12 ஆண்டுகளுக்கும் மேலாக தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த கடைகளை காலி செய்து தருமாறு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, ஊராட்சித் துறை மகளிர் திட்ட அதிகாரிகளிடம் கடையை காலி செய்ய சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே பேரம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு 6 கடைகளை ஒப்படைக்க கோரி மாநில வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனரிடம் பலமுறை முறையிட்டு நடவடிக்கை எடுக்காத நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி 6 கடைகளை காலி செய்து மகளிர் குழுக்களுக்கு ஒப்படைக்காததால் அந்த கடைகளை மகளிர் குழுக்களுக்கு ஒப்படைக்க கிராம சபை மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது….

The post பேரம்பாக்கத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி மகளிர் குழுக்களுக்கு 6 கடைகள் ஒதுக்கீடு; கிராம சபையில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Barambakkam ,Gram Sabha ,Tiruvallur ,Kadambathur Union ,Perambakkam Panchayat Council ,President ,Jayanthi Swayamprakash ,
× RELATED கிராம சபை கூட்டங்களில் மீண்டும்...