
சென்னை: சீன மொழியில் ஜே.எஸ்.கே. சதீஷ்குமாரின் ‘ஃபயர்’ படம் வெளியாக உள்ளது. ஜே.எஸ்கே.சதீஷ்குமார் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் ‘ஃபயர்’. இதில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்தார். சாந்தினி, சாக்ஷி அகர்வால், ரச்சிதா ஹீரோயின்களாக நடித்தனர். சமூக அவலங்களை தோலுரித்து காட்டும் படமாக இது அமைந்திருந்தது. இந்த படத்துக்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த படத்துடன் மேலும் 11 படங்கள் வெளியான நிலையில் 3வது வாரம் கடந்தும் இந்த படம் மட்டுமே வெற்றி பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை நல்ல விலைக்கு போயுள்ளது. மேலும் கேரளாவிலும் இப்படம் ரிலீசாக உள்ளது. இதைத் தொடர்ந்து சீன மொழியில் டப் ஆகி படம் ஏப்ரலில் சீனாவில் ரீலீசாக உள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதியின் மகாராஜா படம் சீனாவில் வெளியாகி பெரிய ஹிட்டானது. அந்த சாதனையை ‘ஃபயர்’ படம் முறியடிக்கும் என டிரேட் வர்த்தகர்கள் கூறுகின்றனர். சிறு பட்ஜெட்டில் உருவான இந்த படம் நல்ல லாபத்தை தந்துள்ளதாக தியேட்டர் அதிபர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
