×

ஜி.வி.பிரகாஷ் பாடிய செகண்ட் சான்ஸ் ஆல்பத்தில் அம்மு அபிராமி

சென்னை: கவிஞர் வைரமுத்து வரிகளில், ஸ்ரீபி இசையில் உருவாகியுள்ளது  செகண்ட் சான்ஸ்’ இசை ஆல்பம். ஸ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்‌ஷிதா குரல்களில் எ ஸ்பாட் லைட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கியுள்ளார். வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது ‘செகண்ட் சான்ஸ்’.

மகேஷ் சுப்பிரமணியம், அம்மு அபிராமி நடித்துள்ள இப்பாடல் இன்று படக்குழுவினர் கலந்துக்கொள்ள மீடியாவினர் முன்னிலையில் கோலாகலமாக வெளியிட உள்ளனர். இளம் நட்சத்திரங்களான ரியோ, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் சௌந்தர் இவ்விழாவில் கலந்துகொண்டு பாடலை வெளியிட்டு, படக்குழுவை பாரட்ட உள்ளனர். தயாரிப்பாளர் மது கூறும்போது, ‘‘திறமையானவர்கள் அனைவரும் இந்த பாடலில் இணைந்துள்ளனர். அனைவரும் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். தெளிவான பார்வையுடன் இந்த பாடலை அவர்கள் உருவாக்கி இருக்கின்றனர்’’ என்றார்.

Tags : G. V. Ammu Abrami ,Second Sans ,Prakash ,Chennai ,Vairamuthu ,Shribi ,Second Sans' ,Sabari Manikandan ,A Spot Light Entertainment ,Sridhar Master Dance ,Jivi Prakash Kumar ,Naresh Iyer ,Rakshita ,
× RELATED துப்பாக்கி, பில்லா 2 பட வில்லன் வித்யூத் ஜம்வால் நிர்வாண ‘போஸ்’