×

சேலத்தில் இருந்து தேனிக்கு தாவும் புதிய பாசக்காரர்களால் கோஷ்டி மோதல் உருவானதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘தேனிக்காரர் குரூப்புக்குள் யார் உண்மை விசுவாசி என்ற மோதல் தொடங்கி இருக்காமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி பொதுக்குழுவில் சேலத்துக்காரரின் கை ஓங்கி, தேனிக்காரர்  கரம் சரிந்து போனது. அப்போது மெடல் மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள இலைக்கட்சியினர் தாங்கள் சேலத்துக்காரர் பக்கம் இருப்பதாக காட்டிக்  கொண்டனர். தேனிக்காரருக்கு ஆதரவு காட்டிய ஓரிருவரும் கூட தங்களை நேரடியாக தேனிக்காரருக்கு தங்களுடைய விசுவாசத்தை காட்டி, கோஷ்டிபூசலில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லையாம். இந்நிலையில் சமீபத்தில் வந்த நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு,  திடீரென ஒரு பெருங்கூட்டம், ‘நாங்க தேனிக்காரர் பக்கங்க’ என்றபடி தங்களை  தேனிக்காரரின் ஆதரவாளராக அடையாளம் காட்டி, இனிப்புகள் வழங்கியும்,  போஸ்டர்கள் ஒட்டியும் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்காங்க. தீர்ப்புக்கு முன்புவரை சேலத்தை தோளில் தூக்கி சுமந்தவர்கள் இவர்கள். ஆனால், துவக்கத்தில் இருந்து தேனிக்காரருக்கு விசுவாசமாக இருந்த மாவட்டத்தின் முக்கிய இலைக்கட்சி நிர்வாகிகள்  எல்லாம் இப்போது கெத்து காட்டுறாங்களாம். அதாவது, ‘எந்தப்பக்கம் காத்தடிக்குதோ அந்தப்பக்கம் சாயுறவங்க நாங்க  இல்லை.. ஆரம்பத்துல இருந்து நாங்கதான் தேனிக்காரருக்க ஆதரவு கொடுத்துக்கிட்டு இருக்கோம்’  என்றபடி, புதிதாக தேனிக்காரருக்கு ஆதரவு காட்டுபவர்களுடன் கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ தொண்டர்கள் ஆதரவு இல்லை என்றாலும் தன்னை தொடர்ந்து ெடன்ஷன், அப்செட்டில் வைத்திருப்பதாக சேலம்காரர் கடும் கோபத்துல இருக்காராமே… அந்த விஐபி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘  சேலத்துக்காரர் மற்றும் தேனிக்காரர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து,‘‘  சின்ன மாவட்டத்தில் இருந்து பெரும்பாலான இலை கட்சி நிர்வாகிகள்  சேலத்துக்காரர் அணிக்கு சென்று விட்டார்களாம். வைத்தியானவருக்கு  வேண்டியவரான மாவட்ட செயலாளர் மட்டும் தேனிக்காரருக்கு தற்போது வரை ஆதரவாக  இருந்து வருகிறாராம். கோர்ட் உத்தரவை தொடர்ந்து, ‘‘ வைத்தியானவரின்  அணியில் இருந்து விலகி சென்ற பல நிர்வாகிகள், தற்போது தேனிக்காரருக்கு  ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக வைத்தியானவரை போனில் தொடர்பு கொண்டு  பேசி வருகிறார்களாம். சின்ன மாவட்டத்தில் இருந்து மேலும் முக்கிய  நிர்வாகிகள் தேனிக்காரர் அணிக்கு தாவ இருக்காங்களாம். இந்த  தகவல் தெரிய வந்ததும் சேலத்துக்காரர் கடும் அப்செட்டில் இருந்து வருகிறாராம். என்னை டென்ஷன் படுத்துவதும், என் மூடை அப்செட் ஆக்குவதுமே தேனிக்காரரின் வேலையாக இருக்கு. அவரை சும்மா விடமாட்டேன். மொத்த லீகல் டீமையும் இறக்கி கோர்ட்டில் அவரா, நானா என்று பார்த்துவிடுகிறேன். இனிமேல் யாரும் நம்ம சைடில் இருந்து தேனிகாரர் சைடுக்கு தாவக்கூடாது என அவரது டீமுக்கு  சேலத்துக்காரர் அதிரடி உத்தரவு போட்டுள்ளாராம். இதனால் சேலத்துக்காரர்  தாவும் நபர்களுக்கு ஓபனாக வெயிட் பண்ணுங்க பெரிய அளவில் வெகுமதி தருகிறேன் என்று ரகசியமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எதற்காக இலை கட்சியின் மக்கள் பிரதிநிதிக்கு மேலிடத்தில் இருந்து டோஸ் விழுந்ததாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை  மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்னையை கையில்  எடுத்து போராட்டம் நடத்தினால் கட்சியில் நமக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும்  என நினைத்து இத்தொகுதியின் மக்கள் பிரதிநிதி மாஸ்டர் பிளான் போட்டாராம்.  இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் மேலிடத்தில் பெயர்  வாங்கவேண்டும் என கணக்கு போட்டு, சமீபத்தில்,  வால்பாறையில்  ஆர்ப்பாட்டம் நடத்தினாங்களாம். ஆனால், எதிர்பார்த்த அளவு ஊழியர்களோ, தொண்டர்களோ, பொதுமக்கள் கூட்டமோ கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணவில்லையாம். இதனால், இப்போராட்டம் பிசு பிசுத்து போச்ச. இந்த விவகாரம், கட்சியின் எதிர் குரூப் மூலம் மேலிடத்தில் போட்டு கொடுத்துவிட்டதாம். உடனே மேலிடத்தில் இருந்து மக்கள் பிரதிநிநிதிக்கு அழைப்பு வந்ததாம்.  “ஏன்யா, இப்படி கட்சி பெயரை கெடுக்குறே. கூட்டத்தை கூட்ட முடியவில்லை என்றால் அமைதியாக இரு. கூட்டமே இல்லை என்றால் இலை கட்சி அவ்வளவுதான்… கூட்டமே வரலை என்று நெகடிவ் இம்பேக்ட் தான் கிடைக்கும். இது தேவையா என்று கடிந்து கொண்டார்களாம்… இதனால், இலைக்கட்சி  மக்கள் பிரதிநிதி ரொம்பவே அப்செட்டாம்…’’ என்றார் விக்கியானந்தா.   ‘‘பட்டதுபோதும் இனி போராட்டத்துக்கே போக மாட்டேன் என்று தாமரை நிர்வாகி அலறுகிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அதியமான்   கோட்டை மாவட்டத்துல பாரதமாதா கோயிலின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே   புகுந்த மலராத கட்சியின் மாநில துணைத்தலைவரை  போலீஸ்காரங்க தூக்கிட்டாங்க.  ஜெயிலுக்கு போகவே கூடாதுன்னு அவர் போட்ட நாடக வேஷத்தை  உடம்புல  ஒண்ணுமில்லைன்னு சொல்லி டாக்டருங்க கலைச்சுப்புட்டாங்க. உடனே  அப்படியே  அலாக்கா தூக்கிக்கிட்டு போன போலீஸ், மாங்கனி ஜெயிலுக்குள்ள  தள்ளிட்டாங்க.  தன்னை பார்க்க தாமரை தலைவர் வருவார்.. ஆறுதல் சொல்லுவார்… வக்கீல் படையை  அனுப்பி நம்மளை வெளியே எடுப்பார் என்று நினைத்துதான் இந்த வேலையிலேயே  இறங்கினாராம் மாநில துணைத் தலைவரு. கட்சிக்காரங்கக்கிட்ட எல்லாம்  தலைவர்  வருவாரா வருவாரான்னு கேட்டுக்கிட்டே இருக்காராம். மாலைன்னு ஒண்ணு  விழுந்தா  அது எனக்கு மட்டும்தான் விழணும் என்று குறியாக இருக்கிற தலைவரு,   ஜெயிலுக்கு போனா மத்தியில இருக்கிறவங்களோட பார்வை ஜெயில்பக்கம்   போயிடுமுன்னு கப்சிப்புன்னு இருந்துட்டாராம். அதே நேரத்துல இப்படியே விட்டா   மேலிடத்துக்கு நம்ம மேல கம்ப்ளைண்டு போயிடுமுன்னு மேலிட பார்வையாளர்கள்   சிலரை ஜெயிலுக்கு அனுப்பி வச்சாராம். இவர்களை நம்பி பொலிட்டிக்கல் செஞ்சா   நம்மள செஞ்சிடுவாங்கன்னு மாங்கனி ஜெயில்ல இருக்கும் மாநில துணைத்தலைவரு   இப்போ புலம்பிக்கிட்டிருக்காராம். இனி போராட்டத்துக்கே போக யோசிக்கணும்  என்று நிலையில் இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா….

The post சேலத்தில் இருந்து தேனிக்கு தாவும் புதிய பாசக்காரர்களால் கோஷ்டி மோதல் உருவானதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Thani ,Salem ,Koshti ,Passakars ,Peter Uncle ,Lighthyakshi ,Honey Dadu ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...