×

பெங்களூர் பங்களாவை விற்கிறார் ராஷ்மிகா: ஐதராபாத்தில் செட்டில் ஆகிறார்

ஐதராபாத்: ‘புஷ்பா’ படம் மூலம் இந்திய சினிமாவில் நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் ‘சுல்தான்’ படத்தின் மூலம் அறிமுகமானார். பின் விஜய்யுடன் இணைந்து ‘வாரிசு’ படத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘புஷ்பா 2’, 1700 கோடி ரூபாய் வசூலித்து சாதித்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. தற்போது பாலிவுட் திரையுலகிலும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் வெளியான இவரது ‘சாவா’ இந்தி படம் ரூ.331 கோடி வசூலித்துள்ளது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பெங்களூரில் உள்ள இவருடைய பங்களாவின் பழைய மதிப்பு ரூ.8 கோடி என சொல்லப்படுகிறது. இப்போது மேலும் பல கோடிகளுக்கு இந்த பங்களா போகுமாம். இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வரும் ராஷ்மிகா, ஐதராபாத்தில் செட்டில் ஆகப் போகிறார். இதனால் பெங்களூர் பங்களாவை விற்றுவிட்டு, ஐதராபாத்தில் குடும்பத்துடன் செட்டில் ஆகப்போகிறாராம் ராஷ்மிகா. இதற்காக அவர் அங்கு வீடு பார்த்து வருகிறார்.

Tags : Rashmika Mandanna ,Bangalore ,Hyderabad ,Vijay ,
× RELATED ஜமா பாரி இளவழகன் ஜோடியாக ரம்யா ரங்கநாதன்