×

மோகன்லாலுடன் நடிப்பதை மறக்க முடியாது: மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி

திருவனந்தபுரம்: பல மொழிப் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் மாளவிகா மோகனன், தற்போது மலையாளத்தில் உருவாகும் ‘ஹ்ருதயபூர்வம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை சத்யன் அந்திக்காடு இயக்க, மோகன் லால் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் அனுபவம் குறித்து மாளவிகா மோகனன் நெகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது:

இவ்விருவரின் படங்களைப் பார்த்துதான் நான் வளர்ந்திருக்கிறேன். இன்று அவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளேன். எனது கனவுகளில் ஒன்று நிறைவேறி இருக்கிறது. இந்த அனுபவம் என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். அறிமுகம் இல்லாத 2 பேர் சந்தித்து, பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிப் பழகும் மனதை வருடும் கதை கொண்ட இதுபோன்ற படங்கள் எப்போதுமே அதிக வரவேற்பு பெறும்.

Tags : Mohanlal ,Malavika Mohanan Lainichi ,Thiruvananthapuram ,Malavika Mohanan ,Sathyan Anthikadu ,
× RELATED பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா..? ரகசியம்...