×

அரிய வகை மிருகத்தின் கதை லில்லிபுட்

சென்னை: விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் தேனீ தொகுதி விவசாய வேட்பாளராக நடித்தவர், சேலம் வேங்கை அய்யனார். மாஸ்டர் மகேந்திரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோருடன் ‘கரா’ என்ற படத்தில் தாதாவாகவும் நடித்துள்ளார். அவர் அரசியல்வாதி வேடத்தில் நடித்து, தனது பூவாயி அம்மன் மூவிஸ் சார்பில் தயாரிக்கும் படம், ‘என்டர் தி டிராகன்’. இதில் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு நடிக்கின்றனர்.

பார்த்திபன்.ஜெ இயக்குகிறார். ஹீரோவாக வெற்றி நடிக்கிறார். இதையடுத்து ‘லில்லிபுட்’ என்ற படத்தை சேலம் வேங்கை அய்யனார் தயாரிக்கிறார். லில்லிபுட் என்பது ஒரு அரிய வகை மிருகம். இதை வீட்டில் வைத்து வணங்கினால், நினைத்ததை சாதிக்கும் வல்லமை கிடைக்கும். அவதார் இயக்கும் இந்த பான் இந்தியா படத்தில் 5 முன்னணி ஹீரோக்கள் நடிக்கின்றனர்.

Tags : Chennai ,Salem Vengai Ayyanar ,Theni ,Vijay ,Dada ,Master Mahendran ,Naan Kadavul' Rajendran ,
× RELATED துப்பாக்கி, பில்லா 2 பட வில்லன் வித்யூத் ஜம்வால் நிர்வாண ‘போஸ்’