×

ஜெயலலிதாவுக்கு சரியான சிகிச்சை ஆறுமுகசாமி ஆணையத்திடம் எய்ம்ஸ் குழு அறிக்கை தாக்கல்; 23-ம் தேதி அரசிடம் ஒப்படைக்க திட்டம்

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான  7 பேர் உள்ளடக்கிய எயம்ஸ் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. ஆறுமுகசாமி எய்ம்ஸ் மருத்துவக்குழு ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆணையத்தில் அளிக்கப்பட வாக்குமூலங்களில் ஆவணங்களையும், அப்போலோ மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கைகள் என அனைத்தையும் ஆய்வு செய்தனர். இதன் மூலமாக எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆணையத்தில் அளித்த அறிக்கையின் இறுதி முடிவுகள்: ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபடுவதற்கு முன்பாக நீரழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருந்த்தையும், அதற்கு சிறப்பு மருத்துவகள் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது திராட்சை, கேக், இனிப்புகளையும் சாப்பிட்டுள்ளார். 20.09.2016 அன்று இரவு 10 மணிக்கு ஆம்புலன்ஸ் கேட்டு ஜெயலலிதா இல்லத்தில் இருந்து தொடர்பு கொண்டதாகவும், அப்போது இருந்த உடல்நிலை பார்த்து, முதற்கட்ட சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு இன்சுலின் உள்பட நோய் தன்மைக்கு ஏற்ப மருத்துகள் அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக பேஸ்மேக்கர் கருவியும் ஜெயலலிதாவிற்கு பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து லண்டன் மருத்துவர் ரிச்சட் பிலே உள்பட அப்பல்லோ சிறப்பு மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவ குழுவும் சிசிக்சை அளித்து வந்தனர். டிசம்பர் 3ம் தேதி ஜெயலலிதா உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 4ம் தேதி மூச்சுவிடுவதற்கு பெரும் சிரம்பட்டுள்ளார்.  இதைதொடர்ந்து இதயம் செயலிழந்தால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5ம் தேதி உரிய மருத்துவ நடைமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு அப்போலோ மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் உடலை பரிசோதித்து மூளை மற்றும் இதயம் செயலிழந்தது  என்பதை உறுதி செய்து டிசம்பர் 5ம் தேதி 11.30 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என்றும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கட்டுப்படுத்தமுடியாத அளவிற்கான நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். என்றும், பாக்டீரியா ரத்தத்தில் பரவி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்னைகள் காரணமாக  இறுதியாகவும் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது எய்ம்ஸ் மருத்துவ குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 23ம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி இறுதி அறிக்கையை அரசிடம் சமர்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது….

The post ஜெயலலிதாவுக்கு சரியான சிகிச்சை ஆறுமுகசாமி ஆணையத்திடம் எய்ம்ஸ் குழு அறிக்கை தாக்கல்; 23-ம் தேதி அரசிடம் ஒப்படைக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : AIIMS ,Arumugasamy commission ,Jayalalithaa ,Chennai ,Dr. ,Sandeep Seth ,Supreme Court ,Dinakaran ,
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த திட்டச் செலவு அதிகரிப்பு!!