×

மறைமலைநகர் நகராட்சியில் கழிவறை கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்க்காரணை பகுதியில், கடந்த 2014ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் ₹24 லட்சம் மதிப்பில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே நவீன கழிவறை கட்டிடம் கட்டப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நாளடைவில் இந்த கழிவறை முறையான பராமரிப்பின்றி குடிநீர் குழாய், பீங்கான் தொட்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உடைந்து சேதமாகிவிட்டன. இதனால் அந்த கழிவறையை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த நவீன கழிவறை கட்டிடத்தை உரிய உபகரணங்களுடன் முறையாக சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நகரமன்றத் தலைவர் மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்….

The post மறைமலைநகர் நகராட்சியில் கழிவறை கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Karamalai Nagar Municipality ,Chengalpattu ,Kilkarana ,Chengalpattu District ,Kiramalainagar Municipality ,AIADMK ,
× RELATED செங்கல்பட்டு படாளம் அருகே கார் மீது...