சென்னை: படப்பிடிப்பு தளத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஒருவரை கவின் திட்டியதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் லிப்ட், டாடா, ஸ்டார், பிளடி பெக்கர் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் கைவசம் தற்போது ஹாய், கிஸ் உள்ளிட்ட படங்கள் உள்ளன. இந்த நிலையில், படப்பிடிப்பில் கவின், நடந்துகொண்ட விஷயம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில், ஒரு காட்சியில் பைக் ஓட்டி வந்த ஸ்டண்ட் கலைஞர் ஒருவர், தவறுதலாக கவினை இடிப்பதுபோல் சென்றுள்ளார்.
இதனால் கடுப்பான கவின், அந்த ஸ்டண்ட் கலைஞரை தகாத வார்த்தையை பயன்படுத்தி திட்டிவிட்டாராம். தனது ஸ்டண்ட் கலைஞரை ஹீரோ கவின் திட்டயத்தை அறிந்த ஸ்டண்ட் மாஸ்டர் தில் சுப்புராயன், உடனடியாக கவினை அழைத்து, இப்படியெல்லாம் தவறான வார்த்தை பயன்படுத்த வேண்டாம் என்பது போல் எச்சரித்ததாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
