×

தாத்ராவுக்கு குஜராத்தின் 4 கிராமங்கள் வழங்கப்படுமா?

புதுடெல்லி: குஜராத்தில் வல்சாத் மாவட்டத்தில் உள்ள மேக்வால், நாகர், ரேமால் மற்றும் மதுபான் ஆகிய 4 கிராமங்கள் மற்றும் சவுராஷ்டிராவின் கோகலாவின் ஒரு பகுதியை தாத்ரா யூனியன் பிரதேசத்துடன் இணைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 1989ம் ஆண்டு குஜராத்துக்கு டையூவால் வழங்கப்பட்ட இடத்துக்கு பதிலாக இந்த இடங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த கிராமங்களையும், சவுராஷ்டிராவின் அமைதிக்கான நிலத்தையும் தாத்ரா யூனியன் பிரதேசத்துடன் இணைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. ஆனால், இதில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. குஜராத் வறண்ட மாநிலம் என்பதால் 4 கிராமங்களும் யூனியன் பிரதேசத்தின் அதிகார வரம்பிற்குள் வந்த பிறகு, அங்கும் மதுபானங்கள் கிடைக்கும்….

The post தாத்ராவுக்கு குஜராத்தின் 4 கிராமங்கள் வழங்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Dadra ,New Delhi ,Meghwal ,Nagar ,Raymal ,Madhuban ,Valsad ,Saurashtra's… ,Dinakaran ,
× RELATED அப்பாவி உயிர்கள் போன பிறகு செயல்படும்...