×

போர்ச்சுகல் கார் பந்தயம்: மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமார்

சென்னை: போர்ச்சுகல் நாட்டில் நடக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்ற அஜித் குமார், முன்னதாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் மீண்டும் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அஜித் குமார் அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கு நடக்கும் ரேஸில் பங்கேற்கும்போது நன்றாகவும், அதிக புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது. கார் ரேஸ் ஜாம்பவான் அயர்டன் சென்னா இங்குதான் தனது முதல் ஃபார்முலா 1 வெற்றியைப் பதிவு செய்தார். அவர் வென்ற அதே ரேஸ் சர்க்யூட்டில் ரேஸில் பங்கேற்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது எனக்கு அதிக பெருமையாக இருக்கிறது. இது ஈசியான சர்க்யூட் இல்லை.

குறிப்பாக, கடைசி செக்டாரை டெக்னிக் கலாகவே அணுக வேண்டும். இங்கு எனது கார் ரேஸ் டைமிங் குறைந்து வருவது மகிழ்ச்சியை தருகிறது. இந்த ரேஸ் நன்றாகவே சென்று கொண்டிருக்கிறது. ஆனால், காலையில் நடந்த பயிற்சி சுற்று மோசமாகி விட்டது. எனது கார் மிகவும் மோசமான விபத்தில் சிக்கியது. மெக்கானிக் மற்றும் டீம் உறுப்பினர்களின் தீவிர முயற்சியால் உடனே கார் சரி செய்யப்பட்டது. இதன் காரணமாகவே தகுதி சுற்றுக்குள் எனது கார் தயாரானது. இதற்காக எனது டீமுக்கு மிகப்பெரிய நன்றி’ என்றார்.

கார் விபத்தில் சிக்கினாலும், அஜித் குமார் பாதுகாப்பாகவே இருக்கிறார். ரேஸில் அவர் பங்கேற்கும் போட்டியை நேரில் பார்க்க ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதுபற்றி அஜித் குமார் கூறுகையில், ‘எனக்கு மிகவும் பிடித்த இந்த மோட்டர் ஸ்போர்ட்ஸை இப்போது பலரும் பின்தொடர தொடங்கியது எனக்கு அதிக மகிழ்ச்சியை அளித்துள்ளது. எனது ரசிகர்கள் மட்டுமின்றி, நான் என்ன செய்கிறேன் என்பதை மிகவும் அக்கறையுடன் கவனிக்கும் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்’ என்றார். அவர் பேசிய இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

Tags : Portugal Car Race ,Ajith Kumar ,Chennai ,Portugal ,
× RELATED திடீரென்று கிளாமருக்கு மாறிய ரஜிஷா விஜயன்