- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- துணை ஜனாதிபதி
- ஜகதீப் தன்கர்
- தில்லி
- ஜகதீப் தங்கர்
- பிரதி துணை தலைவர்
- ஜெகதீப் தங்கர்
டெல்லி: டெல்லியில் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தங்கருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். துணை குடியரசு துணைத்தலைவராக பதவியேற்ற பின் டெல்லியில் உள்ள இல்லத்தில் ஜெகதீப் தங்கருக்கு பூங்கொடுத்து கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தமிழக சட்டமன்ற செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் இருந்தனர். இரவு 12 மணிக்கு டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி விமான நிலையத்தில் திமுக பொருளாளரும், மக்களவை குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்.பி.க்கள் வரவேற்றனர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர், அங்கு இரவு தங்கினார். இன்று காலை குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தங்கரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்லும் முதலமைச்சர், 11.30 மணிக்கு நாட்டின் 15வது குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவிக்கவுள்ளார். மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.இந்த சந்திப்பின்போது, தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவை தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்தம், நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்துக்கு தேவையான புதிய திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது….
The post டெல்லியில் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.
