- திருவனந்தபுரம்
- சுப்பிரமணியன்
- மூணாறு
- இக்கா நகர்
- இடுகி மாவட்டம்
- கேரளா
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மார்க்சிய…
திருவனந்தபுரம்: மைனா, கும்கி உள்பட பல்வேறு படங்களில் நடித்த மூணாறை சேர்ந்த சுப்ரமணியன் திடீரென சுருண்டு விழுந்து மரணமடைந்தார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு இக்காநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (57). பிரபல நடிகரான இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகராக இருந்தார். மேலும் இக்காநகர் பகுதி செயலாளராகவும் இருந்துள்ளார். மைனா, கழுகு, கும்கி உள்பட பல்வேறு தமிழ் படங்களிலும், டிவி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் சுப்பிரமணியன் நேற்றுமுன்தினம் தொடுபுழாவில் நடந்த இடுக்கி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் திரும்பி வரும் வழியில் அடிமாலி என்ற இடத்தில் வைத்து அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவருடன் வந்தவர்கள் உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் மரணமடைந்தார்.