×

மணிவிழா காணும் அன்புச் சகோதரர் எழுச்சித் தமிழர் திருமாவளவனை நெஞ்சார வாழ்த்துகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்து..!!

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து ட்விட்டர் பதிவில், மணிவிழா காணும் அன்புச் சகோதரர் எழுச்சித் தமிழர் திருமாவளவனை நெஞ்சார வாழ்த்துகிறேன். சனாதன சங்கத்துவதை வீழ்த்தி சமத்துவ இந்தியாவை கட்டமைக்கும் நமது பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல் விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திருமாவளவன் என்பது பெயர்ச்சொல் அல்ல, சனாதனத்திற்கு எதிரான வினைச் சொல். சனாதனத்துக்கு எதிரான கருத்தியல் போரை எல்லா தளங்களிலும் சமரசம் இன்றி நடத்தி வரும் அன்புத் தோழர் திருமாவளவன் அவர்களுக்கு மணிவிழா வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து, சசிகலா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, அன்பு சகோதரர் திருமாவளவன் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளையில், அவர் மக்கள் பணி, சமூகப் பயணம் தொடர்ந்து தமிழ் மண்ணிற்கு ஆற்றிடவும்,  நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். திருமாவளவன் பிறந்த நாளுக்கு மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்….

The post மணிவிழா காணும் அன்புச் சகோதரர் எழுச்சித் தமிழர் திருமாவளவனை நெஞ்சார வாழ்த்துகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Eguchchi Tamil ,Thirumavalavan ,Chief Minister ,M.K.Stalin ,Su.Venkatesan ,Chennai ,Liberation Tigers of India ,Thol ,M. K. Stalin ,Việtịnh Tigers Party ,Echchi Tamil ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து...