×

சியாச்சின் பனிமலையில் பலியான ராணுவ வீரர் உடல்; 38 ஆண்டுகளுக்கு பின் மீட்பு

ஹல்த்வானி: சியாச்சினில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷனில் பலியான ராணுவ வீரர் உடல் 38 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது.உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில் கடந்த 1984ம் ஆண்டு‘ஆபரேஷன் மேக்தூத்’என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையிட குமாவோன் படைப்பிரிவைச் சேர்ந்த சந்திரசேகர் ஹர்போலா உட்பட 20 கொண்ட வீரர்கள் குழு சென்றது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது பனிச்சரிவில் சிக்கினர். 15 வீரர்கள் உடல் மீட்கப்பட்டது. சந்திரசேகர் ஹர்போலா உட்பட 5 பேர் உடல் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், 38 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பகுதியில் உள்ள பழைய பதுங்கு குழியில் சந்திரசேகர் ஹர்போலாவின் உடல் தற்போது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது உடல், சந்திரசேகர் ஹர்போலாவின் மனைவி சாந்தி தேவியிடம் ஒப்படைக்கப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட உள்ளன. இதே போல, சியாச்சினில் மற்றொரு வீரரின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை….

The post சியாச்சின் பனிமலையில் பலியான ராணுவ வீரர் உடல்; 38 ஆண்டுகளுக்கு பின் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Siachen ,Haldwani ,Pakistan ,Dinakaran ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ