×

எதிரிகள் பயம் போக்கும் கலங்காமல் காத்த விநாயகர்

குரு ஸ்தலமான ஆலங்குடியில் வீற்றிருப்பவர் ‘கலங்காமல் காத்த விநாயகர். கஜமுகா சுரன் என்ற அசுரன் தேவர் முதலான அனைவரையும் துன்புறுத்திவந்தான். இந்திரன் முதலாய தேவர்கள் அனைவரும் ‘காக்க வேண்டி’ இவரிடம் பிரார்த்தனை செய்ய ‘கலங்காமல் போய் வாருங்கள்!’’ நான் அவனை அழிக்கிறேன் என்று கூறி, தம் படையுடன் சென்று வாகனமாக வைத்துக் கொண்டதால் ‘கலங்காமல் காத்த விநாயகர்’ ஆனார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவி திருத்தலத்தில் ‘மிளகுப் பிள்ளையார்’ கோயில் உள்ளது. இவர் மிகவும் விசேஷமானவர். இப்பகுதியில் மழை இல்லாத போது மிளகை அரைத்துத் தேய்த்து சிறப்பு அபிஷேகம் செய்கிறார்கள். உடனே மழை பெய்யும் என்பது நம்பிக்கை.

தாமிரபரணிக் கரையோரம் மணி முத்தீஸ்வரம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. ‘உச்சிஷ்ட கணபதி’ ஆலயம்! விநாயகப் பெருமானுக்கு உண்டான 32 வடிவங்களுள் இந்த ‘உச்சிஷ்ட கணபதியும் ஒன்று. தேவியைத் தனது இடது தொடையில் அமர்த்தி வைத்தவாறு காணப்படுகிறார்.

- டி.எம். ரத்தினவேல்

Tags : Ganesha ,
× RELATED கிழமைகள் தரும் கீர்த்தி