×

வஞ்சகத்தை வேரறுப்பாள் பஞ்சமுக வாராகி

வேலூர் - வாலாஜா

ருளாளகிரிக்கும் (சோளிங்கர்),
அஸ்திகிரிக்கும் (காஞ்சிபுரம்) நடுவே அமைந்துள்ளது ஔஷதகிரி எனும் தன்வந்திரி பீடம். கொங்கணர், அகஸ்தியர் விஜயம் செய்த பூமி, வேகவதி நதி பாயும் பூமி. மந்திரமே யந்திரமானதால் மந்திரமலை எனும் பெயர் கொண்ட பூமி. சித்தர்கள் வாழும் பூமி.

தாயார் ஆரோக்கிய லட்சுமி எனும் திருப்பெயரிலும், உற்சவர் வைத்யலட்சுமி ஸமேத வைத்தியராஜன் எனும் திருப்பெயர்களிலும் திருவருட்பாலிக்கும் தலம் வேலூர் வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடம். இத்தலத்தில் மூலவர் தன்வந்திரி பகவான் 7.5 அடி உயரத்தில் நின்ற நிலையில் அருட்பாலிக்கிறார். இத்தல விருட்சமாக புன்னைமரமும், தல தீர்த்தமாக வேகவதி நதியும் விளங்குகிறது. இத்தலத்தில் சுக்கு, வெல்லம், தைலம் போன்றவைகளே பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஷண்மத ஸ்தாபன நிவாரண ஹோம பூஜைகள் இங்கு நடத்தப்பெறுகின்றது, வேலூர் மாவட்டம், கீழ்புதுப்பேட்டை, அனந்தலையில் ஞானகுரு டாக்டர். முரளிதர ஸ்வாமிகளால் தீட்சை பெற்றவர்கள் ஆலய சேவை புரிந்து கொண்டு வருகின்றனர்.

இப்பீடத்தில் ஏற்கனவே ப்ரத்யங்கிரா தேவி, மஹிஷாஸுராமர்த்தினி, சப்தகன்னியர்கள் என 72 க்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த தெய்வங்கள் திருவருட்பாலிக்க தற்போது பஞ்சமுக வாராகியும் இங்கு எழுந்தருள இருக்கிறாள்.

1. காளி
காலம் என்கிற விந்தைத் தத்துவத்தின் தெய்வ வடிவமே காளி. காலம் என்றால் கருநிறம் என்று ஆகும். இவள் கரு நிறத்தவள். காலத்தின் மாற்றத்தை இவள் செய்து வருகின்றாள். இறப்புக்கு ரூபமாக இருக்கிறாள் காளி. உலகையே மகா மயானமாக்கி, மயான ருத்தரனார் மீதே நின்றாடுகிறாள் காளி, கோரமும் இறைவன் செயல் என்று தெளிந்து, அழகைப் போலவே கோரத்தையும் ஏற்கும் பொருட்டுப் பயங்கரத்தை உருவகித்துக் காட்டுகிறாள். காளியன்னை கூரிய நகங்களும், கொடூர ஏளனமான நகையும், தொங்கும் நாவும் கொண்டு நிர்வாணமாயிருப்பாள், அல்லது சவங்களைப்பின்னிய ஆடை, முண்டமாலை, கபாலத் தலையணி இவற்றை அணிந்திருப்பாள். வெட்டுண்ட தலையையும் பிடித்திருப்பாள். ஆயினும் மற்ற இரு கரங்கள் அபயமும் வரதமுமாக இருக்கக் காண்கிறோம்.

2.திரிபுர பைரவி.
ஜாதவேதஸே என்கிற வேத மந்திரத்தினால் இத்தேவியை தியானித்தால் பீடா பரிஹாரமும், தனலாபமும், சகல ஸம்பத்தும் ஏற்படும். லௌகீக, சாஸ்திரீய, ஞான விருத்தியும் அடையலாம்.
முக்தியையும் பெறலாம்.

3.பகளாமுகீ
சத்ரு ஜயம் முக்ய ப்ரயோஜனம். காம க்ரோதாதி அகச்சத்ரு நிக்ரஹமும், சமாதி லாபமும் ப்ரயோஜனங்கள். சமாதி லாபத்தால் ஆத்ம ஞானமும் மோட்சமும் கிடைக்கும். பீதாம்பராதேவியின் அருளால் குபேரன் போன்ற செல்வமும், நல்ல பதவியும், உலகத்தை ஆட்டி வைக்கக்கூடிய சக்தியும் கிட்டும்.

4.சூலினி
துர்கையின் 9 வடிவங்களில் ஒரு வடிவமே சூலினி துர்கை. பல சிறப்புக்கள் மிக்க சூலினி துர்கை மந்திரத்தை தினமும் 108 முறை ஜெயிப்பதன் பயனாக திருஷ்டியும் தீய சக்தியும் விலகி தினசரி வாழ்க்கை நல்லபடியாக இருக்கும். கிரக தோஷங்கள் நீங்கும். தேவை இல்லாத வாகன விபத்து போன்றவை நடக்காமல் இந்த மந்திரம் காக்கும்.

5.வாராகி
லலிதையின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராகி தேவியாவாள். ‘ஜகத் கல்யாண காரிண்ய’ எனும் படி உலகம் உய்ய வேண்டிய பணிகளில் அருளும் ஸப்த மாதர்களில் தலையானவள்.இத்தேவியின் கரங்களில் சங்கு, சக்கரம் இருப்பது தன்பதி திருமாலைப் போல் கணவனுக்கேற்ற மனைவியாய் இருப்பதுபோல் உள்ளது. அனந்த கல்யாண குணங்களை உடையவள்.

வலக்கரம் அபய முத்திரையுடன் இருப்பது அடியாருக்கு அடைக்கலம் தந்து, பயத்தைப் போக்குவதாகவும் உள்ளது. இவள் வாராகியும் தன் அடியார்களின் பாபபீடைகளை எல்லாம், மாயாமல மாசுக்களை எல்லாம் களைந்து அவர்களைத் தூய்மைப் படுத்துகிறாள்.தான் ஈன்ற கன்றினை தன் நாக்கால் நக்கி பசு தூய்மைப்படுத்துவதுபோல தன் தாயன்பால், உயர் குணத்தால் தன்னை அண்டு வோரின் தோஷங்களை எல்லாம் போக்கிப் புனிதமாக்கி, பயம், பந்தம், துன்பங்களிலிருந்து மீட்டு முக்திக்கு அருள் செய்கிறாள்.
இந்த ஐம்பெரும் சக்திகளும் ஓருருவாய் ஐந்துமுக வாராகியாய் எழுந்தருளும் திருக்கோல பிரதிஷ்டை வைபவம் 23.8.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 11.30க்குள் இப்பீடத்தில் நடைபெறுகிறது. தொடர்புக்கு 04172-230033, 230274, 9443330203.

ந.பரணிகுமார்

Tags : Famine ,
× RELATED அதிகரித்து வரும் கொரோனா தொற்று...