×

நாகூர் அருகே பட்டினச்சேரி நடுக்கடலில் தேசியக்கொடி ஏற்றி மீனவர்கள் கொண்டாட்டம்-வந்தே மாதரம் முழக்கமிட்டு உற்சாகம்

நாகப்பட்டினம் : நாகூர் அருகே பட்டினச்சேரி மீனவர்கள் நடுக்கடலில் தேசியக்கொடியேற்றி இனிப்புகள் வழங்கி 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடினர்.நாட்டின் 75வது ஆண்டு சுதந்திரதின அமுத விழாவை நேற்று நாட்டு மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள், பொது இடங்கள் என எங்கு பார்த்தாலும் தேசியக்கொடியை பறக்கவிட்டு பலரும் மரியாதை செலுத்தினர்.இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே பட்டினச்சேரி ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்த மீனவர்கள் 2 படகுகளில் நேற்று அதிகாலை படகில் நடுகடலுக்கு சென்றனர். அங்கு 25 அடி உயரமுள்ள கொடி கம்பத்தை நடுக்கடல் நீரில் மிதக்கவிட்டு மீனவர்கள் படகில் இருந்தபடியே தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வந்தே மாதரம் என முழக்கமிட்டு படகில் இருந்தபடியே இனிப்புகள் வழங்கி சுதந்திர தினவிழாவை கொண்டாடினர்….

The post நாகூர் அருகே பட்டினச்சேரி நடுக்கடலில் தேசியக்கொடி ஏற்றி மீனவர்கள் கொண்டாட்டம்-வந்தே மாதரம் முழக்கமிட்டு உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Pattinacherry ,Nagore ,Vande Mataram ,Nagapattinam ,75th Independence Day ,
× RELATED சிபிசிஎல் நிறுவனம் பணிகளை...