×

ஆர்எஸ்எஸ் டிபி.யில் தேசியக் கொடி படம்: சர்ச்சைக்குப் பிறகு திடீர் மாற்றம்

புதுடெல்லி: மிகுந்த சர்ச்சைகளுக்கு பிறகு தனது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படமாக தேசியக்கொடியை ஆர்எஸ்எஸ் மாற்றியுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைவரும், தங்களின் சமூக வலைதள பக்கங்களில் தேசியக்கொடியை முகப்பட படமாக (டிபி) வைக்கும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். மேலும், பொதுமக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் அழைப்பு விடுத்தப் பிறகும் ஆர்எஸ்எஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் தேசியக்கொடியை வைக்கவில்லை. இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார். 52 ஆண்டுகளாக நாட்டின் தேசியக்கொடியை எதிர்ப்பதன் காரணமாக, பிரதமரின் அழைப்பை ஏற்று ஆர்எஸ்எஸ் தனது ‘டிபி’யை மாற்றவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். ஆனால், 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் வீடுதோறும் மூவர்ணக்கொடி பிரசாரத்துக்கு ஆதரவு அளித்துள்ளதாக ஆர்எஸ்எஸ் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் தனது சமூக வலைதள பக்கத்தில் தேசியக்கொடியை முகப்பு படமாக ஆர்எஸ்எஸ் மாற்றியது….

The post ஆர்எஸ்எஸ் டிபி.யில் தேசியக் கொடி படம்: சர்ச்சைக்குப் பிறகு திடீர் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : RSS ,NEW DELHI ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...