×

ஸ்வரா பாஸ்கரின் எக்ஸ் கணக்கு நிரந்தரமாக முடக்கம்

மும்பை: பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் (36), கடந்த ஜன. 26ம் தேதி குடியரசு தினத்தன்று சமூக ஊடக தளத்தின் மற்ற குழுவிலிருந்து கிடைத்த மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து அதனை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவுக்கு அபத்தமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தலைப்பிட்டிருந்தார். இந்தி மொழில் எழுதப்பட்டிருந்த தனது முதல் பதிவில், ‘காந்திஜி… நாங்கள் வெட்கப்படுகிறோம்; உங்கள் கொலையாளிகள் இன்னும் உயிருடன் உள்ளனர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்த பதிவு, பதிப்புரிமை மீறலாக குற்றச்சாட்டப்பட்டது. மேலும் ஸ்வரா பாஸ்கர் மற்றொரு பதிவில் அவரது குழந்தையின் கையில் மூவர்ணக் கொடியை அசைக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அந்த புகைப்படத்தில் குழந்தையின் முகம் மறைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த பதிவில், ‘என் குழந்தையின் புகைப்படத்தில் யாருக்கு பதிப்புரிமை உள்ளது?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் பதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஸ்வரா பாஸ்கரின் எக்ஸ் தளப் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டது.

இதைப் பற்றி இன்ஸ்டாகிராமில் தெரிவித்த நடிகை, ‘எனது பதிவுகளை மீண்டும் மதிப்பாய்வு செய்யுமாறு ‘எக்ஸ்’ குழுவிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பதிவில், ‘எனது குழந்தையின் படத்தை பதிவிட்டது எப்படி காப்பிரைட் மீறல் ஆகும். எனது கருத்தை நீக்கியதன் மூலம் எனது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. எனவே தயவுசெய்து உங்கள் விதிகளை மதிப்பாய்வு செய்து முடிவுகளை மாற்றுங்கள்’ என ஸ்வரா பாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Swara Bhaskar ,Mumbai ,Bollywood ,Republic Day ,
× RELATED ஜமா பாரி இளவழகன் ஜோடியாக ரம்யா ரங்கநாதன்