×

தனியார் நிறுவனத்தின் உதவியுடன் 10 லட்சம் பேரை கேட் தேர்வுக்கு தயார்படுத்தும் சென்னை ஐஐடி

சென்னை: ஐஐடிக்கள் மற்றும் ஐஐஎஸ்சி ஆகியவற்றில் முதுநிலைப் படிப்பு அல்லது பிஎச்.டி.யில் சேரவும், ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கவும். பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கவும், பொறியியல் பட்டதாரிகளுக்கு நாடு தழுவிய அளவில் நுழைவுத் தேர்வாக இந்த கேட் தேர்வு இருந்து வருகிறது. சென்னை ஐஐடி-ன் தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டத்தின் வாயிலாக கேட் தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில் ‘NPTEL GATE’ என்ற பெயரில் ஆன்லைன் போர்ட்டல் தொடங்கப்பட்டு உள்ளது. கேட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் எண்ணத்துடன், இந்தியாவின் முன்னணி பயண தொழில்நுட்ப அமைப்பான அமெடியஸ் லேப்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இயங்கும் இந்த ‘NPTEL GATE’ போர்ட்டலை அனைத்து மாணவர்களும் கட்டணம் ஏதுமின்றிப் பயன்படுத்தலாம். https://gate.nptel.ac.in. என்ற இணையதள பக்கத்தின் மூலம் கேட் தேர்வுக்கு தயார்படுத்தும் போர்ட்டலை பயன்படுத்தாலாம். இதன் மூலம் கேட் தேர்வுக்கு 10 லட்சம் பேரை சென்னை ஐஐடி தயார் பயன்படுத்தும். …

The post தனியார் நிறுவனத்தின் உதவியுடன் 10 லட்சம் பேரை கேட் தேர்வுக்கு தயார்படுத்தும் சென்னை ஐஐடி appeared first on Dinakaran.

Tags : IIT Chennai ,CHENNAI ,IITs ,IISC ,IIT ,GATE ,Dinakaran ,
× RELATED டேட்டா சயின்ஸ் படித்த 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு: சென்னை ஐ.ஐ.டி தகவல்