
சென்னை: அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா நடித்துள்ள ‘விடா முயற்சி’ படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி ரிலீசாகிறது. இதில் நடித்த திரிஷா பேட்டிகள் எதுவும் தராத நிலையில், ரெஜினா பல்வேறு நேர்காணல்களில் பேசி வருகிறார். ஒரு நேர்காணலில் அஜித்திடம் பிடித்த விஷயம் என்ன என்ற கேள்விக்கு ரெஜினா கசாண்ட்ரா பதிலளிக்கையில், “அஜித் பேசுவதை விட செய்து காட்டிவிடுவார். அந்த செயல் பயங்கரமாக பேசப்படும். அதனால் அவர் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. விடாமுயற்சி முடித்து விட்டுத்தான் கார் ரேஸ் டீமை உருவாக்கினார்.
பிறகு அதிலேயே முழு மூச்சாக இறங்கிவிட்டார். நிறைய அட்வைஸ் கொடுப்பார். அவரது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். அவர் ஒரு வாக்கு கொடுத்துவிட்டால் அதை கண்டிப்பாக நிறைவேற்றி விடுவார். சின்ன விஷயமாக இருந்தாலும் சரி பெரிய விஷயமாக இருந்தாலும் சரி யாருக்கு கொடுத்தாலும் சரி. எதைப் பற்றி கொடுத்தாலும் சரி அதை நிச்சயம் முடித்துவிடுவார். அதற்காக நிறைய உழைப்பை போடுவார். அவரால் செய்ய முடியுமா என யோசிக்கும் விஷயத்தை கூட வாக்கு கொடுத்துவிட்டதால் செய்து காட்டுவார். இந்த விஷயம் அவரை நம்பியவர்களுக்கு நல்ல சூழ்நிலையை உருவாக்கும்” என்றார்.
