×

தச்சூர்-சித்தூர் வரை 6 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை சுமார் 110 கி.மீ தூரத்திற்கு, மத்திய அரசு 6 வழிச்சாலை அமைக்கும் பணிகளுக்காக விவசாயிகளிடமிருந்து நிலம் கையப்படுத்தும் பணி சில வாரங்களாக  நடைபெற்று வருகின்றது. பள்ளிப்பட்டு மார்க்கத்தில் செல்லும் 6 வழிச் சாலைக்காக விவசாயிகளிடமிருந்து சுமார் 300 ஏக்கர் விலை நிலங்கள் கையப்படுத்தப்படுகின்றது. இருப்பினும், சாலைப் பணிகளுக்கு விவசாய நிலங்கள் வழங்க, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று விவசாயிகள் சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில், 60க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. காலை முதல் மாலை வரை விவசாயிகள் தாசில்தார் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாலை தாசில்தார் தமிழந்தி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விவசாயிகள் கோரிக்கை  மாவட்ட கலெக்டரிடம்  தெரிவிக்கப்படும் என உறுதி ஏற்று  போராட்டம் கைவிடப்பட்டது….

The post தச்சூர்-சித்தூர் வரை 6 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Dachur-Chittoor ,Thiruvallur District ,Dachur ,Andhra State Chittoor ,Tachur-Chittoor ,Dinakaran ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி