×

திருவொற்றியூர் மக்கள் புகார் எதிரொலி ‘சிபிசிஎல்’ உற்பத்தியை 75% ஆக குறைக்க உத்தரவு: தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

சென்னை: திருவொற்றியூர் பொதுமக்களிடம் இருந்து வந்த புகார் எதிரொலி காரணமாக ‘சிபிசிஎல்’ (சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) உற்பத்தியை 75% ஆக குறைக்க தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. சிபிசிஎல் நிறுவனத்தில் கச்சா எண்ணை சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில் மணலி, திருவொற்றியூர் மற்றும் அதை சுற்றியுள்ள ஏழு இடங்களில் காற்றில் துர்நாற்றம் நீடித்து வருகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் காற்றின் தரத்தை கண்காணிக்க கரிம கலவை மானிட்டர்கள் பொருத்தப்பட்ட 15 குழுக்கள் கடந்த சனிக்கிழமை உருவாக்கப்பட்டுள்ளன. ஜூலை முதல் வாரத்தில் சத்தியமூர்த்தி நகர், காலடிப்பேட்டை மற்றும் எல்லையம்மன் கோயில் தெருவில் வசிப்பவர்கள் எல்பிஜி போன்ற துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்தனர். இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சிபிசிஎல் யூனிட்டை ஆய்வு செய்து கந்தக மீட்புக்கு இணைக்கப்பட்ட எரியூட்டிகளை உறுதி செய்யுமாறு நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது நிறுவனத்தின் அலகு 98.7 % ஆக செயல்பட்டது. இதையடுத்து எரிவாயு மீட்பு தொடர்பான வேறு சில வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.  இருப்பினும் அப்பகுதி குடியிருப்பாளர்கள் தொடர்ந்து புகார் அளித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பிரச்னையின் மூலத்தை கண்டறிய ஒரு நிபுணர் குழுவை மாநில அரசு அமைத்தது. இக்குழு பல்வேறு அளவுருக்களை சரிபார்தது. பிறகு அறிக்கையை சமர்ப்பித்தது. திருவொற்றியூரில் வசிப்பவர்களிடம் இருந்து வந்த புகார் எதிரொலி காரணமாக ‘சிபிசிஎல்’ (சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட்) உற்பத்தியை 75% ஆக  குறைக்க தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது….

The post திருவொற்றியூர் மக்கள் புகார் எதிரொலி ‘சிபிசிஎல்’ உற்பத்தியை 75% ஆக குறைக்க உத்தரவு: தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : CPCL ,Tamil Nadu Pollutant Board ,Chennai ,Chennai Petroleum Corporation Limited ,Thiruvottyur ,Dinakaran ,
× RELATED நாகையில் சி.பி.சி.எல். நிறுவனத்தின்...