×

75-வது சுதந்திர தின விழா: ஹரித்துவார் கங்கை நதிக்கரையில் மக்கள் திரண்டு உற்சாகம்

லக்னோ: நாட்டில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் உத்திரபிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் கலைக்கட்டியுள்ளன. உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் உள்ள உணவகத்தில் பரிமாறப்படும் உணவுகள் அனைத்தும் மூவர்ணகொடியில் உள்ள நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. கேக் வகைகள், பொரியல் வகைகள் அனைத்தும் சிவப்பு, பச்சை, வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் திரண்ட மக்கள் கையில் தேசியகொடியை ஏந்திக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் நதியின் இருகரைகளில் கூட்டம் வெள்ளம் போன்று காணப்பட்டது. உத்திரபிரதேசம் ஆக்ரா நகரில் தேசிய கொடியை ஏந்திக்கொண்டு பாதுகாப்பு படைவீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். இருசக்கர வாகனங்களில் அவர்கள் அணிவகுத்து சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் சுயாட்சி கொண்டாட்டம் என்ற பெயரில் 20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற விழா நடைபெற்றது. தேசிய கொடியை பெருமைப்படுத்தும் வகையில் மூவர்ணக்கொடியை ஏந்திக்கொண்டு அவர்கள் அணிவகுத்து சென்றனர். அவர்கள் தேசிய கீதம் பாடி நாட்டுக்கு பெருமை சேர்த்தனர். மகாராஷ்ரா மாநிலம் தானே அருகே உள்ள பாட்சா அணை மூவர்ணத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை நகருக்கு தண்ணீர் வழங்கும் அந்த அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர், ராட்சத மின்விளக்குகள் மூலம் தேசியகொடி நிறத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.      …

The post 75-வது சுதந்திர தின விழா: ஹரித்துவார் கங்கை நதிக்கரையில் மக்கள் திரண்டு உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : 75th Independence Day Festival ,Harituwar Ganges river ,Lucknow ,75th Independence Day ,Uttar Pradesh ,Uttarakhand ,75-th Independence Day Festival ,Harithuwar Ganges river bank ,Dinakaran ,
× RELATED சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும்...