×

ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்தி கொலை: நண்பர்கள் 4 பேருக்கு வலை

தில்லைநகர்: திருச்சி உறையூர் கடைவீதியில் பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபரை கத்தியால் குத்தி கொன்ற அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் சரண்ராஜ் (40). ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மங்கலம் (36). நேற்று மாலை தனது நண்பர்கள் 4 பேருடன் உறையூர் கடைவீதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சரண்ராஜ் மது அருந்தினார். அப்போது தகராறு ஏற்பட்டது. இதில் நண்பர்கள் 4 பேரும், சரண்ராஜை அடித்து உதைத்தனர். பின்னர் சரண்ராஜை மக்கள் அதிக நடமாட்டம் உள்ள உறையூர் சாலைக்கு இழுந்து வந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினர். இதில் சரண்ராஜ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.தகவலறிந்து வந்த உறையூர், தில்லைநகர், கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் சரண்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக சரண்ராஜிக்கும், அவரது நண்பர்களுக்கும் முன்விரோதம் இருந்ததும், சரண்ராஜ் அவ்வப்போது ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக பிரச்னையை ஏற்படுத்தி வந்ததால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்ததும், அதன்படி நேற்று மாலை சரண்ராஜிக்கு போன் செய்து உறையூருக்கு வரவழைத்து மது அருந்தி கொண்டிருந்தபோது வேண்டுமென்றே தகராறு செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து சரண்ராஜின் நண்பர்கள் 4 பேரை தேடி வருகின்றனர்….

The post ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்தி கொலை: நண்பர்கள் 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Thillainagar ,Trichy Varayur ,
× RELATED தகராறு செய்த 4 பேர் கைது