- சென்னை
- பிரசாந்த் பாண்டியராஜ்
- விமல்
- லீ
- ஜி. விபிரகாஷ் குமார்
- சூரி
- ராஜ்கிரண்
- ஐஸ்வர்யா லட்சுமி
- Swasika
- ஜெயப்பிரகாஷ்
- நடனம்…
சென்னை: ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘புரூஸ்லீ’ என்ற படத்தை தொடர்ந்து, விமல் நடித்த ‘விலங்கு’ என்ற வெப்தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ், தற்போது எழுதி இயக்கி வரும் படம், ‘மாமன்’. இதில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயப்பிரகாஷ், டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பாலசரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் நடிக்கின்றனர். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, ஹேஷாம் அப்துல் வஹாப் இசை அமைக்கிறார். தாய்மாமன் பாசம் குறித்து யதார்த்தமாக சொல்லக்கூடிய இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே.குமார் தயாரிக்கிறார்.
படம் குறித்து பிரசாந்த் பாண்டியராஜ் கூறுகையில், ‘ஆறு வயது சிறுவனுக்கும், அவனுடைய தாய்மாமனுக்கும் இடையிலான பாசத்தை பற்றி உணர்வுப்பூர்வமாக பேசும் படமாக உருவாகிறது’ என்றார். திருச்சியில் படப்பிடிப்பு நடக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. வரும் கோடை விடுமுறையில் படம் ரிலீசாகிறது.
