×

தாமரைப்பாக்கம் கிராமத்தில் போலாட்சி அம்மன் ஆலய தீமிதி திருவிழா: 200 பக்தர்கள் பங்கேற்பு

பெரியபாளையம்: தாமரைப்பாக்கம் கிராமத்தில் உள்ள  போலாட்சி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவில், விரதம் இருந்து காப்பு கட்டிய 200 பக்தர்கள், தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த தாமரைப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு, போலாட்சி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 31ம் தேதி மண்ணடியில் ஊர் கூடி கூழ் வார்த்தல், இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியை நிகழ்ச்சி நடந்தது. இதனை கடந்த 5ம் தேதி 200 பக்தர்கள் காப்பு கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும்  நடந்தது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் 7ம் தேதி அன்று காலை அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், என வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனையும் காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பூ கரகம் புறம்பாடு அழகுபானை நிற்க வைத்தலும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் காப்பு கட்டி விரதம் இருந்த 200 பக்தர்கள் புனித நீராடிய இடத்திலிருந்து உற்சவர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர், தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். இந்த விழாவிற்கு,  வந்திருந்த திரளான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில், அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அன்றிரவு இரவு 10 மணி அளவில்… அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.  அம்மன் வரும் பகுதிகளில் உள்ள பக்தர்கள் அம்மனுக்கு பூ, பழங்கள் என படைத்து அம்மனை வழிப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், ஊர் பெரியவர்கள், மிகச் சிறப்பாக செய்திருந்தனர்….

The post தாமரைப்பாக்கம் கிராமத்தில் போலாட்சி அம்மன் ஆலய தீமிதி திருவிழா: 200 பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Polakshi Amman Temple Thimiti Festival ,Thamaraipakkam village ,Periyapalayam ,Polakshi Amman temple ,
× RELATED ஏரியில் அளவுக்கு அதிகமாக சவுடு மண்...