×

வாலிபருக்கு கத்திக்குத்து

தாம்பரம்: பள்ளிக்கரணை குப்பைமேட்டில் பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்த வாலிபரை பணம் கேட்டு கத்தியால் வெட்டிய ஒருவர் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (37). இவர் மேடவாக்கம், ரங்கநாதபுரத்தில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி இரவு, இவர் பள்ளிக்கரணை காவல் நிலையம் பின்புறம் உள்ள குப்பைமேட்டில் பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, கஞ்சா போதையில் வந்த மூன்று பேர் ஆனந்தகுமாரை பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் தர மறுத்து, அவர்களிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் கத்தியால் அவரை சரமாரியாக குத்தி, உருட்டுகட்டையால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இதில், அவருக்கு படுகாயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். இப்புகாரின்பேரில், பள்ளிக்கரணைபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில், சம்பவத்தன்று மேடவாக்கம் நெசவாளர் நகரை சேர்ந்த அஜ்மீர் (33), இவரது நண்பர்கள் இரண்டு பேர் ஆனந்தகுமாரை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, கண்ணகி நகரில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான அஜ்மீரை போலீசார் கைது செய்தனர். பின்னர், ஆலந்தூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்தி நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். அஜ்மீர் மீது ஏற்கனவே கிண்டி, பள்ளிக்கரணை, கானாத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ஏற்கனவே இவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறை சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது….

The post வாலிபருக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Tags : TAMBARA ,
× RELATED பெட்ரோலில் தண்ணீர்: இந்தியன் ஆயில்...