×

தவற விட்ட மாணவர்கள் கியூட் தேர்வு எழுத புதிய தேதி அறிவிப்பு

புதுடெல்லி: ஒன்றிய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வான கியூட் தேர்வு எழுத நாடு முழுவதும் 14.9 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். கடந்த 4ம் தேதி, 17 மாநிலங்களைச் சேர்ந்த 489 மையங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நிமிடத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதே போல, நேற்று முன்தினம் நடந்த கியூட் தேர்விலும் இதே பிரச்னை காரணமாக 53 மையங்களில் மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.இந்நிலையில், இத்தேர்வுகளை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு, கியூட் தேர்வு எழுத புதிய தேதிகளை தேசிய தேர்வு முகமை நேற்று அறிவித்துள்ளது. அதன் மூத்த இயக்குநர் சதனா பராஷர் அளித்த பேட்டியில், ‘‘தொழில்நுட்பக் கோளாறால் கியூட் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதிகளில் இத்தேர்வுகள் மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதிய அனுமதி அட்டைகள் விரைவில் வெளியிடப்படும். வரும் 17, 18 மற்றும் 20 தேதிகளில் நடக்க உள்ள தேர்வுகள் எந்த மாற்றமும் இன்றி நடைபெறும்,’’ என்று தெரிவித்தார்….

The post தவற விட்ட மாணவர்கள் கியூட் தேர்வு எழுத புதிய தேதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : QUET ,New Delhi ,CUET ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...