×

அம்பானி, அதானிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஒன்றிய அரசு: டி.ராஜா தாக்கு

திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு அக்டோபர் மாதம் விஜயவாடாவில் நடக்கிறது. பாஜ அரசு மக்கள் விரோத கொள்கைகளை அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் பின்பற்றுகிறது. பாஜ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்தியாவில் வறுமை வளர்வதாக உலக கருத்து கணிப்புகள் சொல்கின்றன. பசியுடன் மக்கள் இருக்கிறார்கள். வேலையின்மை இருக்கிறது. இந்தியாவில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் மயமாக்கப்படுகின்றன. அம்பானி, அதானி போன்ற முதலாளிகளுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு செயல்படுகிறது.பொதுத்துறை நிறுவனங்கள் அழிக்கப்படுவதன் மூலம் சமூகநீதி தகர்க்கப்படுகிறது. 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பாஜ ஆட்சி முறியடிக்கப்பட வேண்டும்.தேர்தலுக்கு முன்பு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று சேர வேண்டும். தமிழகத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் திமுக தலைமையில், ஒன்றுபட்டதால் பாஜவால் வர முடியவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களில் இதுபோல் இல்லை. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பல பிரிவாக செயல்படுகிறது. காலத்தின் தேவை கருதி கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு டி.ராஜா கூறினார்….

The post அம்பானி, அதானிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஒன்றிய அரசு: டி.ராஜா தாக்கு appeared first on Dinakaran.

Tags : Union government ,Ambani ,Adanis ,T Raja Thakku ,Tirupur ,24th All India Conference of the Communist Party of India ,Vijayawada ,BJP government ,Adani ,D. Raja Thakku ,
× RELATED ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின்...