×

இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாநில திட்ட இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் குழந்தைகளை கையாள வேண்டிய விதம் மற்றும் கற்றல் கற்பித்தல் குறித்து இரண்டு நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதன்படி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கும் கருத்தாளர்களுக்கு மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. குறுவள மைய பயிற்சியாக 1 முதல் 5 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு ஒரு பிரிவாகவும், 6 முதல் 8ம் வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் பயிற்சி வழங்கப்படவுள்ளது. மாநில அளவில் கற்றல் கற்பித்தலுக்கான பயிற்சி தொடக்கநிலை பயிற்றுநர்களுக்கு ஆகஸ்ட் 10, 11ம் தேதிகளிலும், உயிர்தொடக்க நிலை பயிற்றுநர்களுக்கு ஆகஸ்ட் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும். மாவட்ட அளவில் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்துதல் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கான தொடக்கநிலை பயிற்றுநர்களுக்கு முன் திட்டமிடல் கூட்டம் ஆகஸ்ட் 13ம் தேதியும் முதற்கட்ட கூட்டம் ஆகஸ்ட் 16, 17ம் தேதியும் 2ம் கட்ட கூட்டம் ஆகஸ்ட் 22, 23ம் தேதியும் நடைபெறும். இதேபோல் உயர் தொடக்கநிலை பயிற்றுநர்களுக்கு முன் திட்டமிடல் கூட்டம் ஆகஸ்ட் 16ம் தேதி, முதற்கட்ட கூட்டம் ஆகஸ்ட் 17, 18ம் தேதியும், 2ம் கட்ட கூட்டம் ஆகஸ்ட் 22, 23ம் தேதிகளில் நடைபெறும். குறுவள மைய அளவில் பயிற்சி  நடைபெறும் தேதி, இடம், கருத்தாளர்கள் நியமனம் ஆகியவற்றை முதன்மை கல்வி அலுவலர்கள் செயல்முறை ஆணையாக பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : State Project Drive for Integrated School Education ,Education ,
× RELATED கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு...