×

பயணக் கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறையை நீக்க வேண்டும்; திமுக எம்பி கவன ஈர்ப்பு தீர்மானம்

புதுடெல்லி: மாநிலங்களவையில் திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதில், ‘கடந்த 2011ம் ஆண்டு தொடங்கி ஏமன், லிபியா ஆகிய அரபு நாடுகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டதால் 2016 முதல் ஒன்றிய அரசு இந்த நாடுகள் விவகாரத்தில் பயண கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதனால், குடியுரிமை அதிகாரிகள் மிகக் கடுமையாக நடந்து கொள்கின்றனர்.  பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்வது தொடங்கி, கைது வரையில் செல்கிறது. அதனால், ஏமன் மற்றும் லிபியா ஆகிய நாடுகளுக்கான பயண கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,’என தெரிவித்துள்ளார். கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை மக்களவையில் திமுக எம்பி நவாஸ்கனி எழுப்பிய கேள்வியில், ‘கடல் அரிப்பை தடுக்க நவீன திட்டம் ஏதேனும் அரசு எடுத்துள்ளதா. அப்படியானால், அதன் விவரங்களும், இல்லையென்றால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்,’என கேட்டார். இதையடுத்து, அதற்கு பதிலளித்த ஒன்றிய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, ‘கடல் அரிப்பை தடுக்கவும், அப்பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மீனவர்கள் மற்றும் உள்ளூர் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019 அறிக்கையின்படி சில கடற்கரைப் பகுதிகள் கடலோர ஒழுங்குமுறை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது,’என தெரிவித்தார். உணவு தானிய மானியம் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு வழங்கிய உணவு தானியங்களின் அளவு என்ன என்பது குறித்து ஆண்டு வாரியாக தெரிவிக்க வேண்டும். அதேப் போன்று உணவு தானியங்களுக்குப் பதிலாக ஒன்றிய அரசால் மாற்றப்பட்ட மானியத்தின் அளவு எவ்வளவு என்பது குறித்து மாநில வாரியாக விளக்கம் அளிக்க வேண்டும்,’என மாநிலங்களவையில் திமுக எம்பி கிரிராஜன் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, ‘கடந்த ஐந்தாண்டுகளில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவின் மூலம் ஆறு கட்டங்களின் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் உணவு தானியங்களுக்கான மானியம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநிலங்களைப் பொறுத்தவரை உணவு மானியம் நேரடி செயல்பாட்டில் உள்ளது,’என தெரிவித்தார்….

The post பயணக் கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறையை நீக்க வேண்டும்; திமுக எம்பி கவன ஈர்ப்பு தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : DMK MP ,New Delhi ,DMK ,MM Abdullah ,Rajya Sabha ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...