×

ரூ. 3 லட்சம் பறித்த பெண் கைது

தாம்பரம்:  வேலூர் மாவட்டம் காட்பாடி, பொண்ணை பகுதியை சேர்ந்தவர் அமுதா (26). இவர் குரோம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தங்கி, செவிலியராக வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் மூலம், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அஜய் ரமேஷ் (38) என்பவர் வாட்ஸ்அப் மூலம் அமுதாவிற்கு அறிமுகமானார். இவர், தான் சிங்கப்பூரில் வேலை செய்வதாகவும், யாருக்காவது வெளிநாட்டில் வேலை வேண்டுமானால், வாங்கி  தருகிறேன், எனவும் கூறியுள்ளார். இதை நம்பிய அமுதா, தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்குமா, என கேட்டுள்ளார். அதற்கு அஜய் ரமேஷ், ‘‘அதிக சம்பளத்தில் வேலை காத்திருக்கிறது,’’என கூறியுள்ளார். இதற்காக கமிஷனாக ரூ. 50 ஆயிரத்தை கூகுல் பே மூலம் அஜய் ரமேசுக்கு கொடுத்துள்ளார்.பின்னர்,  அமுதாவின் நண்பர்களான  ராஜேஷ், சரஸ்வதி, மற்றொரு ராஜேஷ் ஆகியோரிடமும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ. 3 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் வேலை வாங்கி தராமல் அஜய் ரமேஷ், அமுதாவுக்கு மிரட்டல் விடுத்தார். புகாரின்பேரில் குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய அஜய் ரமேஷின் மனைவி பாரதி (26) என்பவரை நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும்,  சிங்கப்பூரில் வேலை செய்து வரும் அஜய் ரமேஷை சென்னை வரவழைத்து கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்….

The post ரூ. 3 லட்சம் பறித்த பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Amuda ,Ponnai, Katpadi, Vellore district ,Crompettai ,
× RELATED தாம்பரம் பகுதிகளில் தொடரும் மின்வெட்டு: இரவில் விடியவிடிய மக்கள் அவதி