×

சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இரண்டு மாணவிகள் கல்லூரியில் லேப்-ல் இருந்த மெர்குரி சல்பைடை உண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை வேப்பேரியில் அரசு கால்நடை மருத்துவமனையில் பயில கூடிய மாணவ, மாணவிகள் தங்கியிருக்கும் விடுதி வேப்பேரி கோபிவெங்கடாஜலம் தெருவில் உள்ளது. இந்த விடுதியில் பயின்று வரக்கூடிய 2 மாணவிகள் மயக்கமடைந்த நிலையில் விடுதியில் ஒரு அறையில் இருந்துள்ளனர். இதை பார்த்த சக மாணவிகள் தகவல் தெரிவித்து ஊழியர்கள் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ சிகிச்சையில் இவர்கள்  ஆய்வகத்தில் இருந்த மெர்குரி சல்பைடு என்ற வேதிப் பொருளை எடுத்து 2 பேரும் உணவில் கலந்து அருந்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் விசாரணையில் 2 பேரில் ஒருவர் மதுரையை சேர்ந்தவர், மற்றோருவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. 20 வயதான இவர்கள் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று வருகின்றனர். விடுதியில் தங்கியிருந்தவர்கள் சில நாட்களுக்கு முன்பு கடந்த வாரம் நண்பர்களுடன் வெளியில் சென்று விட்டு தாமதமாக விடுதிக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தெரிந்து வார்டன்கள் இருவரையும் திட்டியதாகவும் பின்பு பெற்றோர்க்கு தகவல் தெரிவித்து பெற்றோர்களும் இது தொடர்பாக அவர்களை திட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அந்த கல்லூரியில் உள்ள வகுப்பு ஆசிரியர்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டதால் அவர்களிடமும் பேசாமல் கடந்த ஒரு வாரமாக வகுப்பு தோழிகளிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில்  ஆய்வகத்திற்கு சென்றவர்கள் ஆய்வகத்தில் இருந்த வேதிப் பொருளை எடுத்து கொண்டு வந்து உணவில் கலந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட விடுதி வார்டன்கள் மற்றும் விடுதி ஊழியர்கள், வகுப்பு ஆசிரியர்களிடம் விசாரணை நடத்துவது குறித்து அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்….

The post சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Veterinary College of Veterinary Medicine ,Chennai Vapery ,Chennai ,Veterinary Hospital ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...