×

குரங்கு அம்மை நோயாளிகள் பயன்படுத்திய துணிகளை பயன்படுத்தாதீர் : புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது ஒன்றிய அரசு!!

புதுடெல்லி: உலகளவில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்ட குரங்கம்மை நோய், இந்தியாவுக்கும் சமீபத்தில் வந்தது. கேரளாவில் முதல் நோயாளி கண்டறியப்பட்டார். அவர் வெளிநாட்டில் இருந்து வந்தார். இதைத் தொடர்ந்து இதே மாநிலத்தில் பலர் பாதித்துள்ளனர். இதுவரை நாட்டின் மொத்த குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் குரங்கு அம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து ஒன்றிய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. யாருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படும் ?*குரங்கம்மை பாதித்தவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு குரங்கம்மை ஏற்பட வாய்ப்புள்ளது. குரங்கு அம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை!!*குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளியை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். *சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சானிடைசர் உபயோகித்து கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளுதல் *குரங்கு அம்மை நோய் பாதித்த நோயாளிகளின் அருகில் இருக்கும் போது, முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ளுதல். *சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்காக கிருமிநாசினியைப் பயன்படுத்திக் கொள்ளுதல். குரங்கு அம்மை நோய் : செய்யக் கூடியவை!!*குரங்கு அம்மை நோயாளிகள் பயன்படுத்திய துணிகள், படுக்கைகள், துண்டுகளை பிறர் பகிர்ந்து கொள்ள கூடாது. *குரங்கு அம்மை நோயாளிகளின் துணிகளை துவைக்க வேண்டாம்.குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டால் பொது நிகழ்வுகளில் பங்கேற்பதை நிறுத்த *வேண்டும்.

*குரங்கு அம்மை நோய் குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.
*குரங்கு அம்மை தொற்றுக்கு உள்ளானவர்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது.

The post குரங்கு அம்மை நோயாளிகள் பயன்படுத்திய துணிகளை பயன்படுத்தாதீர் : புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது ஒன்றிய அரசு!! appeared first on Dinakaran.

Tags : Union Govt ,New Delhi ,India ,Kerala ,Union government ,Dinakaran ,
× RELATED தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்...